யாரிடத்தில் போவோம்? To Whom Shall We Go? 60-06-04 1.சகோதரன் ரஸல் என்னவென்று எனக்குச் சொல்லுங்கள்....... இல்லை. ஆம் என்றே நான் கருதுகிறேன். அவர் அதைச் சொன்னார். (ஒரு சகோதரன், "அவர் சற்று தவறாகக் கருதப்பட்டார்" என்கிறார் . - ஆசி.) எனவே நான் பார்க்கிறேன். இந்த வழியாக மேலே வாருங்கள். ("ஹு ஹு”] ஆனால் முழுவதும் இந்த வழியாய் அல்ல. 2. நல்லது, நாங்கள் சகோதரன் ரடலுடன் அவருடைய சபையில் இன்றிரவு மீண்டுமாய் இங்கே இருப்பதற்கு நிச்சயமாகவே சந்தோஷப்படுகிறோம். உங்களிடத்தில் மின்சாரம் இருக்குமானால், அவர்கள் சில மின்விசிறிகளை வைத்திருக்கின்றனர். எனவே நீங்கள் உண்மையாக வீட்டிலிருப்பதாகவே உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். நான் அங்கே வெளியே மோட்டார் வாகனத்திலே உட்கார்ந்திருந்து, உள்ளே வரவேண்டிய நேரம் வரை காத்திருந்தேன், ஏனென்றால் அது வெதுவெதுப்பாய் இருக்குமென்று நான் - நான் அறிந்திருந்தேன். இந்தியானாவைப் போன்றே உள்ளது. நமக்கு குளிர்காலம் இருக்கும், அதன் பின்னர் நமக்கு கோடை காலம் இருக்கும். அதன்பின்னர் நாம் மீண்டுமாய் குளிர்காலத்திற்கே போகிறோம். 3. எனவே இன்றிரவு சகோதரன் ரடலுடன் இந்தப் பிரசங்க பீடத்தில் இருப்பதற்கு இரட்டத்தனையான சந்தோஷமாய் இருக்கிறேன், ஏனென்றால் சகோதரன் ரடல் பெரும்பாலும் என்னுடைய பையன்களில் ஒருவரைப் போன்று இருக்கிறார். அநேக வருடங்களுக்கு முன்பாக அவருடைய தகப்பனாரும் நானும் ஒன்று சேர்ந்து வேலை செய்ததை நான் நினைவு கூற முடிகின்றது. அதன் பின்னர் இந்தப் பையன் வந்தபோது அவன் கல்வி கற்று தேவனுடைய வேதாகமப்பள்ளிக்குச் சென்றான் , துவங்கும்போது அவனுக்கு சற்று கடினமாய் இருந்தது. எப்படியாவது வெளியே போவதற்கு அவன் விரும்பாமலிருந்ததைப் போன்று தோன்றுகிறது. அவன் பின் தங்குகிறவனும் வெட்கப் படுகிறவனுமாயிருக்கிறான். ஆனால் முடிவிலே அவன் முன்னேற்றமடைந்தான், இது அவனுடைய முன்னேற்றத்தின் கனியாய் உள்ளது. சகோதரன் ரடல் இப்பொழுதுதான் துவங்கிக்கொண்டிருக்கிறார் என்று நானாகவே நினைத்துக் கொள்கிறேன். இது வெறுமனே ஆரம்பமாயிருக்கிறது. இது எந்த அளவுக்கு வளரும் என்று கூறுவது கடினமாயிருக்கிறது, இது இங்கே மேலே இருக்கின்ற இந்த இருண்ட காடுகளை மூடுமென்று நான் நம்புகிறேன். ஒரு...........  4. நான் வெளியே யாரிடத்திலோ சொல்லிக் கொண்டிருந்தேன். சகோ. மைக் ஈகன் (Mike Egan) சில வருடங்களுக்கு முன்னர் இங்கே வழக்கமாக நான் அணில் வேட்டையாடுவதுண்டு. காரியங்கள் எப்படியாய் மாறுகின்றன. நாகரீகம் மேற்கொள்ளுகிறது போன்று காணப்படுகிறது. இந்த இடம் சுற்றிலுமாய் இப்படியே வளர்ந்து கொண்டு போனால் அணில் வேட்டைக்கு அல்லது முயல் வேட்டைக்கு நமக்கு ஒரு இடமும் இருக்காது. இது போன்று அப்படியே .....  5. சில வருடங்களுக்கு முன்னர் இங்கே உயரே நான் வளர்க்கப் பட்ட பழைய இடத்தில், ஏன், ஒரு அண்டை வீட்டானிடத்திற்கு நீங்கள் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டியதாய் இருக்கும். இப்பொழுதுதோ நீங்கள் பின் கதவு வழியாக தண்ணீரே வெளியே ஊற்றமுடியாது. இல்லையென்றால் அவனுடைய கதவில் ஊற்றி விடுவீர்கள். எனவே எல்லாம் ஒன்று சேர்ந்து நெருக்கமாய் உள்ளன.  6. இங்கே இருப்பது நன்மையாய் உள்ளது. நான் அதிக நேரம் உங்களை காக்க வைக்க மாட்டேன். சற்று நேரம் இங்கே ஜெப கூடாரத்திற்கு வந்து வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்கும்படியாய் சகோதரன் ரடல் என்னைக் கேட்டுக்கொண்டார். 7. இந்த விதமான ஒரு வாலிபமான ஊழியக்காரனுக்கு அது ஒரு காரியத்தைச் செய்கிறது என்று நான் கருதுகிறேன். நாங்கள் வந்து வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும் பொழுது, விசேஷமாக நம்முடைய கர்த்தர் அவருடைய மகிமையில் கொஞ்சம் நமக்கு காண்பிப்பாரானால், அது அண்மையில் தோன்றின இந்த சபையை பலப்படுத்தும். இந்த ஜெப கூடாரத்திலிருந்து இங்கே வந்திருக்கின்ற என்னுடைய சில நண்பர்களையும், சில தர்மகர்த்தாக்கள் முதலானவர்களையும் நான் காண்கிறேன். இப்பொழுது இவர்கள், இந்த ஜனங்களில் அநேகர் கர்த்தர் வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறதை கண்டிருக்கின்றனர். நல்லது, அவர் இன்றிரவு காட்சியில் தோன்றி, அவருடைய மகிமையில், அதை நமக்காக மீண்டும் அவர் செய்வாரானல் அது- அது ஜனங்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்தும். அது அவர்களுக்க ஒரு - ஒரு நம்பிக்கையை கொடுக்கும். 8. அது சகோதரன் ரடலுக்கு உதவியாய் இருக்கும். ஏனென்றால் சகோதரன் ரடல் முழு சுவிசேஷத்தை பிரசங்கிக்க தீர்மானித்துள்ளார். இப்பொழுது, அவர் அதைச் செய்யாதிருந்தால், நான் அவரில் ஏமாற்றம் அடைந்திருப்பேன். கர்த்தர் செய்வாரென்ற நிச்சயமுள்ளவனாய் நான் இருக்கிறேன். ஆகையால் அப்பொழுது அவர் அதனோடு தரித்திருக்கப் போகிறார். ஒருக்கால் இந்த சிறிய கூட்டங்கள் அதைப் போன்று இருக்கலாம், நம்மைப் போன்ற சில வயதான பிரசங்கிமார்கள், உங்களுக்குத் தெரியும், உள்ளே வரும்போது, ஏன், வெளியே இந்த வாலிபப் பையன்களுக்கு இது உதவி செய்கிறது.  9. இப்பொழுது ஜெப கூடார ஜனங்களுக்கு, நாளை நான் இருப்பேன், ஆனால் நான் சரியாக ....... இப்பொழுது ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி வரை நான் ஏதும் ஓய்வெடுக்கப் போவதில்லை. கூட்டத்திற்குப் பின்னர் கூட்டமாகவே உள்ளது. எனவே நான் அநேகமாக ஞாயிறு பள்ளிக்கு வரலாம் ஆனால் பேசுவதற்கு அல்ல.  10. சகோதரன் நெவில், நம்முடைய மேய்ப்பன், அவருடைய மைத்துனி இன்றைக்கு அடக்கம் பண்ணப்பட்டாள் என்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு சற்று முன்பு நான் கேள்விப்பட்டதற்காக வருந்துகிறேன். ஜெபக்கூடாரம் அதை அறிந்திருக்குமோ என்று நான் வியக்கிறேன். சகோதரன் நெவில் இங்கே இருக்கிறார் என்று நான் கருதவில்லை. நான் இதை கூறுவதற்கு முன்பே நான் முழுவதும் சுற்றிப் பார்த்தேன். பூக்களை அங்கு அனுப்புவதற்கு அவர்கள் அறிந்திருப்பார்களோ என்று நான் வியக்கிறேன். எனக்கு சரியாக தெரியவில்லை. சில நிமிடங்களுக்கு முன்புதான் நான் அதை அறிந்து கொண்டேன். சகோதரன் நெவிலின் மைத்துனி இன்று அடக்கம் பண்ணப்பட்டாள் என்று பில்லியிடம் யாரோ கூறினதாக அவன் என்னிடத்தில் கூறினான். நிச்சயமாக அதை கேள்விப்படுவதற்கு வருந்துகிறேன். திருமணத்தின் மூலமாக அவள் என்னுடைய தூரத்து உறவினள். அவள் கடந்து போய்விட்டதைக் கேள்விப்படுவதற்கு நான் வருந்துகிறேன். 11. இன்றிரவு இன்னும் என்னுடைய இரண்டு நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள். டேவ் ரைட் மற்றும் திரு. ஹென்சன். அவர்கள் வியாதியாய் இருந்தனர் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. நேற்று அவர்கள் இருவருமே மருத்துவமனையில் மரித்துப் போய்விட்டனர், இன்று காலை என்று நான் நினைக்கிறேன். 12. ஆகையினால் நாம் இங்கே நீண்ட காலம் இருப்பதில்லை என்ற ஒரு காரியத்தை அது காண்பிக்கிறது. நாம் நேராக வரிசையில் போய்க் கொண்டிருக்கிறோம். அங்கே மேலே இருக்கின்ற அந்த சட்டத்தில் உள்ள நம்முடைய எண்ணுள்ள அட்டையை தேவன் எந்த நேரத்தில் வெளியே எடுக்கப் போகிறார் என்பதை நாம் அறியோம். நாம் பதில் கூற வேண்டியவர்களாய் இருக்கப்போகிறோம். 13. எனவே இன்றிரவு நாம் இந்த ஆராதனையில் நுழைகையிலே இது உஷ்ணமாயும், மிகவும் மோசமாயும் இருக்கிறதை நான் அறிவேன். ஆனால் நாம் உத்தமமாய் இருக்கிறோம். நாம் அவரை நேசிக்கிறோம் என்பதை தேவனுக்கு காண்பிப்பதற்கும், நம்மால் முடிந்த மேலானதைச் செய்வதற்கும் நாம் இங்கு வந்திருக்கிறோம் என்பதை நாம் நினைவு கூருவோமாக. அவரை நேசிக்காதவர்களாய் இங்கே இருக்கின்ற ஒவ்வொரு நபரும் இன்றிரவு அவரோடு அன்பு கூரவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அவரை விசுவாசிக்காமலிருக்கிற எல்லோரும் இன்றிரவு நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இந்தக் கூட்டமானது ஏதோ ஒரு வரலாற்று தனிச் சிறப்பாயிருக்கும்படி, இந்த கூடாரத்திலே, நீங்கள் இந்த நேரத்தை திரும்பி சுட்டிக் காண்பிக்கும்படியாய், அந்த இரவு கர்த்தர் நம்மிடத்திற்கு வந்து, இன்னின்னதை செய்தார் எனக் கூறும்படியிருப்பதாக.  14. எனவே, இப்பொழுது வார்த்தையை வாசிப்பதற்காக நாம் வேதாகமத்தை திறப்பதற்கு முன்பாக ......  15. அங்கே பின்னாக, மிகவும் பின்னால் இருக்கிறவர்களே நான் கூறுவதை உங்களால் கேட்க முடிகிறதா? இந்தப் பக்கமாக இருக்கிறவர் களுக்கு ...... உங்களுக்கு சரியாகக் கேட்கிறதா என்று நான் வியக்கிறேன். சரியாக உங்களால் கேட்க முடிகிறதா? அங்கே சரியாய் உள்ளதா? அநேக தலைகள் அசைக்கப்படுகிறதை நான் காணவில்லையே. இதைப் பற்றி எப்படி? அது மேலாக இருக்கிறதா? [சபையார், "ஆமென்" என்கின்றனர். - ஆசி.) சரி. அப்படியானால் இதைப் போன்றே அதை சரியாக அப்படியே வையுங்கள். 16. இப்பொழுது ஒரு வினாடி நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குவோமாக. பயபக்தியான இந்த நேரத்தில், உங்களுடைய கரங்களை உயர்த்துகின்றதன் மூலம் ஜெபத்தில் நினைவு கூர வேண்டுமென்றிருப்பவர்கள் யாராவது இங்கே இருப்பார்களா என்றே நான் வியக்கிறேன். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. அவர் காண்கிறார், அவர் அறிந்திருக்கிறார். 17. எங்கள் கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் பயபக்தி யோடும், எங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடு மட்டுமின்றி எங்கள் இருதயங்களும் வணங்கியவாறே உம்முடைய சமூகத்திற்குள் வருகிறோம். ஏனென்றால் உம்முடைய வார்த்தையில் " எங்கே இரண்டு பேராவது அல்லது மூன்று பேராவது கூடியிருக்கிறார்களோ அவர்கள் மத்தியில் நான் இருப்பேன்” என்று எழுதப்பட்டிருப்பதை நாங்கள் உணருகிறோம். எனவே நீர் இங்கே இருக்கிறீர் என்று நாங்கள் உறுதியாய் இருக்கிறோம், அதாவது இந்த சிறிய கட்டிடத்தில் மகத்தான பரிசுத்த ஆவியானவர் அசைகிறார். ஏனென்றால் அது தேவனுடைய ஒரு வாக்குத்தத்தமாய் உள்ளது. 18. இன்றிரவு எங்களுடைய கூட்டத்தாரை நீர் ஆசீர்வதியும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த சிறிய சபையையும், அதனுடைய போதகரையும், அதனுடைய எல்லா அங்கத்தினர்களையும் ஆசீர்வதியும். அது தேவனுடைய இராஜ்ஜியத்திற்கான அப்படிப்பட்டதான ஒரு கலங்கரை விளக்கமாய் இருக்குமளவிற்கு வளர்ந்து ஜனங்கள் தூரத்திலும், சமீபத்திலிருந்தும் வந்து கர்த்தருடைய கிரியைகளை காணும்படியாய் வளருவதாக. உலகெங்கிலுமிருந்து சாலமோனுடைய ஞானத்தை கேட்கும்படி ஜனங்கள் வந்ததும், அநேக மகத்தான காரியங்கள் சம்பவித்ததுமான அந்த பழைய தேவாலயம் போன்று இது இருப்பதாக. அவருடைய நாமத்தில் நாங்கள் எங்கெல்லாம் கூடுகிறோமோ அதுவே சந்திக்கின்ற இடமாக, கர்த்தருடைய ஆலயமாய் இருக்கிறது. 19. இன்றிரவு நீர் உம்முடைய ஊழியக்காரர்களையும், நாங்கள் உம்மிடத்தில் ஏறெடுக்கும் எங்களுடைய ஜெபங்களையும், நாங்கள் பாடுகின்ற பாடல்களையும் நீர் கனப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, வார்த்தையை ஆசீர்வதியும். அது புறப்பட்டுப் போகையிலே, அது செழிப்பான நிலங்களில் விழுவதாக. சரியாக இந்த வேளையிலே, கர்த்தாவே, ஒவ்வொரு பச்சையான முட்செடியையும், ஒவ்வொரு கசப்பின் வேரையும், எல்லா அவிசுவாசத்தையும், ஜனங்களுடைய இருதயங்களிலிருந்து நீர் வெளியே இழுத்து, வார்த்தையைானது நல்லதும், செழுமையும், வளமுமான நிலத்தில் விழுந்து இந்த ஜனங்களுக்கு மகத்தான விளைவை அது கொண்டு வரும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். 20. தங்களுடைய கரங்களை உயர்த்தின யாவரையும் ஆசீர்வதியும். நீர் அவைகளைக் கண்டும், அவர்களுடைய தேவைகளை அறிந்தும் இருக்கிறீர். இதை எங்களுக்கு அளியும் பிதாவே, உம்முடைய பரிசுத்த குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தின் மூலமாக நாங்கள் இதை கேட்கிறோம். ஆமென். 21. இப்பொழுது இன்றிரவு உங்களுடைய வேதாகமங்களை வைத்திருக்கிற நீங்கள், என்னோடு நீங்கள் பரிசுத்த யோவான். 6-ம் அதிகாரத்திற்கு திருப்ப நான் விரும்புகிறேன். நாம் 66-ம் வசனத்தி லிருந்து துவங்கி சிலவற்றை வாசிப்போம். பரிசுத்த யோவான். 6:66. அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி; நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே . நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். 22. நான் இதை ஒரு தலைப்பாக அழைக்க விரும்புகிறேன், நான் அதை இவ்விதமாக, நாங்கள் யாரிடத்தில் போவோம்? என்றே அழைக்க விரும்புகிறேன். 23. உங்களுக்குத் தெரியும். இந்த நாளின் ஜனங்களில் பெருவாரி யான பாகம் அந்த நாளில் இருந்த வண்ணமாக இருக்கின்றனர். ஜனங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாதவர் களாயும், அதைக் குறித்து அக்கரையற்று தென்படுகின்றவர்களாயுமே அவர்கள் நடந்து கொள்கின்றனர். ஓய்வு நேரத்திலே எங்கு வேண்டுமோ அங்கு செல்ல, ஒருவிதமான சந்தோஷம் தேடும் ஜனங்களாயிருக்கவே விரும்புகிறார்கள். ஏதேன் தோட்டத்தில் அவன் தேவனை விட்டு விட்டபோது அவன் இருந்தவண்ணமாகவே கிட்டத்தட்ட இருக்கிறான், அவன் தன்னைத்தானே நகர்த்திக் கொள்ளவே விட்டான். அவன் வெறுமனே காட்சியில் இருந்து தேவனை விட்டுவிட்டு சந்தோஷ பைத்தியம் கொண்டவனாய், அவன் எங்கெல்லாம் விரும்புகிறானோ அங்கெல்லாம் செல்கிறான். 24. அவன் தன்னுடைய எண்ணங்களில் அதிகமாக மாறவேயில்லை. அவனுடைய கருத்துக்களில் அவன் அதிகமாக மாறவேயில்லை. அவன் இன்னமும் தன்னுடைய அத்தி இலை மார்க்கத்தை விரும்புகிறான் என்று உங்களுக்குத் தெரியும். அந்த வார்த்தை அர்த்தமுள்ளதாய் இருந்தால் அவன் தானாகவே அதைச் செய்து கொண்டு, அவன் தன்னையே மூடிக்கொண்டு ஏறக்குறைய நடந்து போய்விட, ஏறக்குறைய திருப்தி அடைந்தவனாய், தன்னில்தானே திருப்தி கொண்டவனாய் ஆக்கிக் கொள்ள விரும்புகிறான். அவன் திருப்தியாக்கப்பட்டிருக்கிறான் என்று தானே விசுவாசிக்கும்படியாய் ஆக்கிக் கொள்கிறான். அப்பொழுது அவனுடைய ஆத்துமாவின் ஆழத்திலோ அவன் தவறாய் இருக்கிறான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். மனிதன் எதையாவது செய்ய வேண்டியதாயிருந்தால், துவக்கமே மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பதை அவன் அறிந்திருக்கிறான். அவன் தன்னுடைய காலணி நாடாக்களை அணிந்து சந்திரனில் குதிக்கக் கூடியதைக் காட்டிலும் அவன் தன்னையே இரட்சித்துக் கொள்வது ஒருபோதும் முடியவே முடியாது. அவனால் அதைச் செய்ய முடியாது. அவன் அவ்விதமாய் செய்ய முயற்சிப்பது சிறுத்தை அதனுடைய புள்ளிகளை நக்கி நீக்கிப்போட முயற்சிப்பது போன்றுள்ளது. அவன் தன்னுடைய பாவங்கள் அதிக பிரகாசமா யிருப்பதை மாத்திரமே காட்டுகிறான். ஆனால் அவன் இன்னமும் செவி கொடுக்க விரும்பவில்லை. அவன் அப்படியே சுற்றி அலைகிறான். 25. ஆனால், அந்நாளிலே, பேதுரு இன்றிரவு இங்கே இருக்கின்ற, நம்மில் அநேகரைப் போன்று பதிலளித்திருக்கக்கூடும். அவன் ஏதோ வித்தியாசமானதைக் கண்டிருந்தான். அவன் இயேசுவை சந்தித்து, அப்படியே அலைந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் அங்கே ஏதோ காரியம் இருப்பதை அவன் அறிந்து கொண்டான். இயேசுவை சந்திக்கின்ற எவரொருவரும் அதற்கு மேல் ஒருபோதும் அலைந்து கொண்டிருக்க விரும்பமாட்டார்கள். அவன் இயேசுவை சந்திக்கும் போது, அவனுக்கு ஏதோ ஒரு காரியம் சம்பவிக்கிறதாய் உள்ளது. அவன் அதற்கு மேல் அதே நபராய் ஒருபோதும் இருப்பதில்லை. இந்தப் பேதுரு இயேசுவை சந்தித்த போது, எல்லோரிடத்திலுமிருந்து வித்தியாசமாய் இருந்த ஏதோ ஒன்றை அவன் இயேசுவில் கண்டறிந்திருந்தான். இயேசுவைப் போல ஒரு மனிதனும் இருந்ததேயில்லை. அவன் இந்த மகத்தான ஏதோ ஒன்றை அவரில் கண்டிருந்தான். அதுவே அவனை, "கர்த்தாவே நாங்கள் யாரிடத்தில் போவோம்?” என்ற இந்தக் கேள்விக்குப் பதிலை உண்டாக்கினது. 26. இயேசுவானவர், "இப்பொழுது நீங்கள் மற்ற எழுபது பேர்களோடு கூட போக வேண்டுமானால் நீங்கள் தாராளமாய் போகலாம். நீங்கள் அப்படியே போகலாம்" என்றார். 27. ஆனால் பேதுரு, "நாங்கள் எங்கே போவோம்? யாரிடத்தில் நாங்கள் போக முடியும்? ஏனென்றால் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் மட்டும் தானே உண்டு" என்றான். அவரைத் தவிர வேறு யாரிடத்திலும் அது இல்லாதிருந்தது. போதுமான நீண்ட காலம் பேதுரு அவரோடே இருந்து அவருடைய அற்புதங்களையும், அடையாளங்களையும் தேவனிடத்திலிருந்து வந்த அதிசயங்களையும் கண்டு, அது சத்தியம் என்பதையும், நித்திய ஜீவனின் வார்த்தையை அவர் உடையவராய் இருந்தார் என்பதையும் அறிந்திருந்தான். 28. ஓ, நம்மால் மட்டும் போதுமான காலம் அவரோடு கூட இருந்து அவர் மட்டுமே நித்திய ஜீவனின் வார்த்தையை உடையவராயிருக்கிறார் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால் நலமாய் இருக்கும். 29. இப்பொழுது மற்றவரைக் காட்டிலும் மிகவும் அதிக வித்தியாசமாய் இருக்கும்படியாக இயேசுவானவர் என்னத்தைத்தான் வைத்திருந்தார்? அவர் ஏன் ரபியைக் காட்டிலும் வித்தியாசமாய் இருந்தார் ? ரபி ஒரு ஆசாரியனாய் இருந்தான். அவன் ஒரு போதகன், ஒரு பண்டிதனாய் இருந்தான். ஒருக்கால் உலகத்தின் கல்வியிலே இயேசுவானவரைக் காட்டிலும் மிகவும் அதிகமாய் அறிந்தவனாய் இருந்திருக்கலாம். 30. இயேசுவானவர் எப்போதாவது பள்ளிக்குச் சென்றதாகவோ அல்லது மனிதனிடத்திலிருந்து எந்தக் காரியத்தையாவது கற்றுக் கொண்டதாகவோ நம்மிடத்தில் மூலச்சான்று ஏதும் இல்லை. அது அவருக்கு தேவையில்லாதிருந்தது. அவர் தேவனுடைய குமாரனா யிருந்தார். என்ன செய்ய வேண்டுமென்பது அவருக்கு பரத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. இதைக் கண்டறிய நாங்கள் யாரிடம் போவோம்? என்று பேதுரு கூறுமளவிற்கு இந்த பரலோக வெளிப்படுத்துதல் இந்த சீஷர்கள் மேல் அப்பேர்ப்பட்டதான ஒரு எண்ணத்தைக் கொண்டு வந்திருந்தது. 31. இன்றிரவு இது அதைப்போன்றே உண்மையாய் இருக்கிறது. நாம் அவரிடத்தில் வராமலிருந்தால், இதைக் கண்டறிய நாம் எங்கே போவோம்? 32. இப்பொழுது நான் இங்கே கீழே ஒரு துண்டு காகிதத்தின் மேல் ஏழு காரணங்களை, இல்லை, ஏழு காரியங்களை எழுதி வைத்திருக்கிறேன். அதாவது நாம் இயேசுவினிடத்தில் வரவேண்டும் என்பதே அந்த காரணங்கள். நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்னர் அடுத்த இருபது அல்லது முப்பது நிமிடங்களில் இந்த ஏழு காரியங்களின் பேரில் நான் பேச விரும்புகிறேன். 33. ஏன்? இயேசுவானவரிடத்தில் இருந்தது என்ன? அது வித்தியாச மாயிருந்ததா? அவர் ஒருவராக மட்டும் ஏன் இருக்க வேண்டும்? 34. முதலாவது காரியம், இயேசு, "நானே வழியாய் இருக்கிறேன் " என்றார். இப்பொழுது ஒரே ஒரு பரலோகம்தான் உண்டு. ஒரு தேவனே இருக்கிறார். அங்கு போக ஒரே வழிதான் உண்டு. அங்கு செல்ல ஒரே ஒரு வழிதான் உண்டேயன்றி அநேக வழிகள் இல்லை. இயேசு, "நானே அந்த வழி'' என்றார்.  35. இப்பொழுது நாம் மற்ற வழிகளை உண்டு பண்ண முயற்சிக்கி றோம். நாம் மற்ற வழிகளும் உண்டு என்று கூற முயற்சிக்கிறோம். நாம் கோட்பாட்டின் வழியை உடையவர்களாய் இருந்து, நாம் அதைப் பின்பற்ற முயற்சிக்கிறோம். நம்மில் அநேகர் சபைகளில் நாம் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்க ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை உடையவர்களாய் இருக்கிறோம். ஒரு அத்தி இலையில் மூடிக்கொள்ளுதல் ஒருக்கால் அது சரியானதாய் இருக்கலாம்.  36. ஆனால் நீங்கள் பரலோகத்திற்கு போவதாக இருந்தால், நீங்கள் இயேசுவின் மூலமாகத்தான் வரவேண்டும். ஏனென்றால் அவரே வழியாக இருக்கிறார். இயேசுவினால் மாத்திரமேயல்லாமல் பரலோகத்திற்குப் போவதற்காக வேறு எந்த வழியுமே இல்லை. நாம், "நம்முடைய ஸ்தாபனம்" என்று அழைக்கிற வழிகள் நமக்கு உண்டு. இன்றைக்கு நீங்கள் ஒரு மனிதனிடத்தில், ''நீ ஒரு கிறிஸ்தவனா?" என்று கேளுங்கள். "ஓ, நான் ஒரு மெத்தோடிஸ்ட்டு”. "நீ ஒரு கிறிஸ்தவனா?”  37. "நான் பேப்டிஸ்ட். நான் பிரஸ்பிெேடரியன். பெந்தெகோஸ்தே அல்லது நசரேயன் அல்லது அதைப் போன்று ஏதோ ஒன்று" என்பான். கேள்வி அதுவல்ல. 38. ஒரு கிறிஸ்தவனாயிருப்பதற்கு, நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும். நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக செல்ல ஒரே ஒரு வழிதான் உண்டு. அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமேயன்றி கோட்பாடுகளின் மூலமாகவோ அல்லது சபைகளின் மூலமாகவோ அல்ல. நாம் மறுபடியுமாய் பிறக்க வேண்டும். நாம் மறுபடியும் பிறக்கும் பொழுது, அப்பொழுது நாம் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிறோம். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், நீங்கள் அந்த வழியில் இருக்கிறீர்கள், ஏனென்றால் அவரே வழியாய் இருக்கிறார்.  39. ஒரு சமயத்தில் வேதாகமத்தில் ஒரு மனிதன் இருந்தான். அதைக் குறித்து இயேசுவானவர் தம்முடைய பெயர்போன உவமைகளில் கூறியிருக்கிறார். அதாவது ஐசுவரியமான ஒரு மனிதன் இருந்தான். அவன் தன்னுடைய மகனுக்காக ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணினான். அது ஒரு கலியாண விருந்தாய் இருக்கப்போவதாய் இருந்ததாம் என்று அவர் கூறினார். அவன் ஜனங்களை வரும்படியாய் அழைத்திருந்தான். விருந்து ஆயத்தமாகி, எல்லாம் பரிமாறப்படுவதற்கு ஆயத்தமாய் இருந்தது. விருந்தினர் அனைவரும் அமர வைக்கப்பட்டிருந்தனர். கல்யாண வஸ்திரம் இல்லாதிருந்த ஒரு மனிதன் மேஜையிலே கண்டுபிடிக்கப்பட்டான்.  40. இப்பொழுது, வேதத்தை வாசிக்கிற அநேக ஜனங்கள் இந்த வேத வார்த்தையை மிகவும் அறிந்தவர்களாக இருக்கின்றனர். 41. இராஜா இந்த நபரிடம் "நண்பனே கல்யாண வஸ்திரம் இல்லாமல் நீ ஏன் இங்கு இருக்கிறாய்?" என்றார். "கல்யாண வஸ்திரம் இல்லாமல் நீ ஏன் வந்தாய்?" என்ற கேள்வியானது கேட்கப்பட்டது.  42. நீங்கள் கவனித்தீர்களா? வேதம், " அவன் பேசாமல் இருந்தான்'' என்று கூறியுள்ளது. அவனுக்கு எந்த சாக்குபோக்கும் இல்லாதிருந்தது. 43. இப்பொழுது கிழக்கத்திய ஸ்தலங்களுக்குப் போகவும், கிழக்கத்திய திருமணங்களைக் காணத்தக்கதான சந்தோஷம் எனக்கு உண்டாயிருந்தது. அவைகள் மாறுவதில்லை. ஆயிரம் ஆயிரம் வருடங் களாகவே அதே பழக்க வழக்கங்கள். 44. இப்பொழுது யாரையாவது கனப்படுத்தும்படி ஒரு கல்யாண விருந்து கொடுக்கப்படுகின்றபோது, மணவாளன் உள்ளே வருகின்ற எல்லா ஜனங்களுக்குமே வஸ்திரங்களைக் கொடுக்கிறான். ஏனென்றால் அவனுடைய நண்பர்கள் ஏழையும், பணக்காரனும், வித்தியாசமானவர்களாய் இருக்கின்றனர். ஆனால் அவன் அழைக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு அழைப்பிதழை கொடுக்கிறான். அந்த அழைப்பிதழில் மணவாளனின் பெயர் அதின்மேல் இருக்கும். அவன் இந்த அழைப்பிதழை வாசலுக்கு கொண்டு வருகிறான். வாயிலோன் வாசலண்டை நின்றவனாய், அவனே அந்த வஸ்திரங்களை வைத்திருக்கிறான். 45. ஆகையினால், ஒரு மனிதன் உண்மையாகவே அருமையாக உடுத்திக் கொண்டு வருகிறான். வாயிலோன் அவன் மேல் ஒரு வழக்கமான வஸ்திரத்தை உடுத்துகிறான். அடுத்த மனிதன் வருகிறான், இடைப்பட்ட தரமானவன், அவன் அவ்வளவு மோசமாக உடுத்தியிருக்க வில்லை. ஆனாலும் அந்த ஐசுவரியவானுக்குக் கிடைத்த அதே விதமான வஸ்திரத்தை அவனும் பெறுகிறான். பின்னர் அடுத்த நபர் வருகிறான், ஓ , சந்தேகமேயில்லை, ஆனால் கல்யாண விருந்துக்கு அழைக்கப் பட்டிருக்கிறான். அவனுடைய நண்பனுக்கு அவ்வளவு கனத்தை அளிக்க அவன் தன்னுடைய ஆடைகளையெல்லாம் துவைத்து, அவன் தன்னை அவ்வளவாய் ஆயத்தப்படுத்தினான். ஆனாலும் அவன் அதை வீணாகவே செய்தான்.  46. அந்த வண்ணமாக அது இருக்கிறது. அதைக் குறித்து நாம் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை. தேவன் இயேசு கிறிஸ்து மூலமாக நம்முடைய இரட்சிப்பை அளித்திருக்கிறார். அது நாம் செய்யக்கூடிய எதினாலோ அல்லது நாம் எத்தனை நன்மையான காரியங்களைச் செய்ய முடியும் என்பதினாலோ அல்ல. அதெல்லாம் சரிதான். அதற்கு எதிராகக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. "ஆனால் நீங்கள் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்''. 47. பின்னர் இந்த ஏழ்மையான மனிதனுக்கு அந்த பணக்கார மனிதனுக்கும், அந்த இன்னொரு மனிதனுக்கும் கிடைத்த அதே விதமான வஸ்திரமே கிடைக்கிறது. அப்பொழுது அவர்கள் மேஜையண்டையிலே உட்கார்ந்து கொண்டிருக்கும்பொழுது அவர்கள் எல்லோரும் ஒரே விதமாய் காணப்படுகிறார்கள். 48. இப்பொழுது, இந்த மனிதனுக்கு என்ன நேர்ந்தது? என்ன சம்பவித்தது? "அவன் பேசாமல் இருந்தான்". ஏனென்றால் அவன் ஒரு ஜன்னல் வழியாக உள்ளே ஏறி வந்திருந்தான், அல்லது பக்கவாட்டில் உள்ள கதவின் வழியாக வந்திருந்தான். அல்லது அவனுக்காக அளிக்கப் பட்டிருந்த வழியை விட்டு வேறு ஏதோ ஒரு வழியில் உள்ளே வந்தான். அவன் வஸ்திரத்தை தவற விட்டிருந்தான். 49. நியாயத்தீர்ப்பின் நாளன்று அந்த விதமாகவே இருக்கும். மற்ற வழிகளும் இருக்கின்றன. சபையின் வழிகளும் இருக்கின்றன. கோட்பாடுகளின் வழிகளும் இருக்கின்றன. அநேக வித்தியாசமான காரியங்களின் வழிகளும் இருக்கின்றன. ஆனால் இயேசுவோ, "நானே அந்த வழியாய் இருக்கிறேன்'' என்றார். பரிசுத்த யோவான் 10-ல் அவர், "நானே அந்த ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல்” என்றார். இன்றைக்கு ஜனங்கள் அன்றைக்கு அவர்கள் இருந்தது போலவே, அவர்கள் அந்த வழியை தெரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த வழியையே விரும்புகின்றனர். அது அந்த அளவிற்கு நல்லது என்று அவர்கள் நினைக்கின்றனர். 50. இங்கே சில காலத்திற்கு முன்னர், அது லூயவில்லில் என்று நான் நினைக்கிறேன். அங்கே ஒரு வாலிப மனிதன் இருந்தான். அவனுடைய காதுகள் ஒன்றில் ஏதோ கோளாறு அவனுக்கு இருந்தது. எனவே அவன் தன்னுடைய வைத்தியரிடத்திற்குச் சென்றான். அவனுடைய வைத்தியர் அநேக வாரங்களாக அவன் பேரில் காத்திருந்தார். அது இன்னும் மோசமானது. முடிவிலே அந்த வைத்தியர், "நான் உன்னை ஒரு விசேஷித்த வைத்தியரிடம் அனுப்பியாக வேண்டும்” என்றார். 51. விசேஷித்த வைத்தியர் அதை அலசி ஆராய்ந்தபொழுது, அது ஒரு பெரிய மருத்துவப் பெயராயிருந்தது. அதை நான் நம்பவில்லை. நான் அதை அறிந்திருந்தால், என்னால் அதைக் கூறமுடிந்தால், நான் அதை எழுதிவைத்து, அதை எழுத்துக் கூட்டிச் சொல்ல ஒரு மணிநேரம் பயிற்சிக்கவேண்டும். அதன் பிறகு நான் அதை எழுத்துக் கூட்டி அல்லது அதைச் சொன்ன பிறகு நான் என்ன சொன்னேன் என்பதும் உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அது துவக்கத்திலேயே என்னவாயிருந்தது என்பதை நான் அறியாதிருந்தேன். ஆனால் அதுவோ அவனுடைய ஜீவனையே எடுத்துவிடுவது போன்றதான ஏதோ ஒரு கோளாறாய் அவனுடைய காதில் இருந்தது. அவர், "இந்தக் காரியமானது முற்றிப்போய்விட்டது. ஆனால் பரி. லூயிஸில் வசிக்கிற ஒரு குறிப்பிட்ட வைத்தியரேயன்றி இந்த வியாதியை முழுவதுமாக பரிசோதித்து, அது உண்மையிலேயே சரிதானா அல்லது இல்லையா என்று சொல்லக்கூடிய யாராகிலும் இருக்கிறார்களா என்பதை நான் அறியேன்" என்று கூறிவிட்டாராம். 52. அந்தப் பையன் உடனே வேகமாக பரி. லூயிஸுக்கு விரைந்தான். அந்த வைத்தியரோ வேலை ஓய்வுபெற்று நியூ ஆர்லென்ஸிற்குப் போய் விட்டிருந்தார். அவர் ஒரு தெற்கத்தியராய் இருந்தார். எனவே அவர் நியூ ஆர்லென்ஸிற்கு திரும்பிப் போய்விட்டார். அந்தப் பையன் துரிதமாக ஆகாயவிமானத்தில் ஏறி, நியூ ஆர்லென்ஸிற்கு விரைந்தான். அந்த வயோதிப வைத்தியர் அதைப் பார்த்துவிட்டு, "அவர்கள் அதை சரியாகத் தான் கணித்திருக்கிறார்கள், மகனே, அது அதிகமாய் முற்றிப் போய்விட்டது” என்றாராம். 53. அந்த வாலிபன் அவரிடத்தில், “வைத்தியரே நீர் இந்த அறுவை சிகிச்சையை செய்வீரா?'' என்றான். 54. அதற்கு அவர், "இல்லை மகனே, என்னால் அதைச் செய்ய முடியாது. என்னுடைய கரங்கள் சரியான நிலையில் இல்லை” என்றாராம். அவர், "இப்பொழுது எனக்குத் தெரியாது, ஆனால் உலகிலேயே இந்த அறுவை சிகிச்சையை செய்யக்கூடிய ஒரு மனிதர் இருக்கிறார்" என்றார். அவர், "அந்த மனிதன் இப்பொழுது நியூயார்க் பட்டணத்தில் இருக்கிறார். அந்த மனிதன் ஆறுமாத கால ஓய்வெடுத்துக் கொண்டு கப்பலில் ஐரோப்பாவிற்கு போகிறார். உன்னால் அவரைப் போய் பிடிக்க முடியுமா என்பதை நான் அறியேன்; அப்படி அவரைப் பிடித்தாலும் கூட அவர் உனக்கு இந்த அறுவை சிகிச்சையை செய்வாரா என்று எனக்குத் தெரியாது. இந்த விநோதமான வியாதிக்கு அறுவை சிகிச்சை செய்ய எனக்குத் தெரிந்த ஒரு மனிதன் அந்த ஒருவர் மட்டுமே. உன்னால் பொருத்திருக்க முடியாது. நீ ஆறு மாதங்களுக்குள் மரித்துப் போய் விடுவாய்'' என்றாராம், 55. அவன், "உடனே தொலைபேசியை எடுங்கள், அவரை அழையுங்கள். ஏதாவது காரியத்தை செய்யுங்கள். நான் மரிக்க விரும்பவில்லை. எப்படியாவது அவரைப் பற்றிப் பிடியுங்கள்" என்றானாம். அவர்கள் முடிவிலே அந்த வைத்தியரைப் பிடித்தார்கள். அவர் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒப்புக் கொண்டாராம். 56. இப்பொழுது இந்த வாலிப மனிதன் அந்த வயோதிய வைத்தியரிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது, அவர் அவனுடைய கோளாறு என்ன என்பதையும், ஒரே ஒருவர்தான் இந்த அறுவை சிகிச்சையை செய்யக்கூடியவர் என்பதையும் அவனிடம் கூறினார். இரட்சிக்கப்படுவதற்கு உள்ள ஒரே வழி இயேசுவே என்று ஒரு ஊழியக்காரன் கூறும் பொழுது, அவனை நோக்கிப் பார்க்கிற சில ஜனங்களைப் போன்று அவன் அந்த வயோதிப வைத்தியரை நோக்கி, "மிகவும் அருமையான சொற்பொழிவு வைத்தியரே, நான் உண்மையாக உம்முடைய பேச்சை கேட்டு ரசித்தேன். இன்னொரு தருணத்திலே நீர் பேசுவதைக் கேட்பதற்காக நான் திரும்பி வருவேன்" என்று கூறும்படியாக நோக்கிப் பார்க்கவில்லை. 57. இப்பொழுது அந்தவிதமாகத்தான் ஜனங்கள் கிறிஸ்துவ மார்க்கத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்த வழியை புறக்கணிப்பது மரணமாயிருக்கிறதென்பதை மட்டும் நீங்கள் உணர்ந்தால் நலமாயிருக்கும். அந்த காரணத்தினால்தான் பேதுரு, "நாங்கள் யாரிடத்தில் போவோம்? ஏனென்றால் நித்திய ஜீவனை நீர் மட்டும்தானே உடையவராயிருக்கிறீர். நீர் ஒரே ஒருவராயும், தேவன் வைத்திருக்கிறதான ஒரே வழியாயும், அது நித்திய ஜீவனுமாயிருக்கிறதே” என்றான்.  58. இப்பொழுது, அவரே வழியாய் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் பிறப்பதின் மூலமாக நீங்கள் கிறிஸ்துவுக்குள் வருகிறீர்கள். இப்பொழுது எப்படி அதற்குள் பிரவேசிப்பது என்பதை நீங்கள் கூறுவதைத் தவிர ஜனங்களிடத்தில் வழியையும், வழியென்றால் என்ன என்பதையுங் குறித்து கூறிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது நீங்கள் கிறிஸ்துவுக்குள் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் அவரில் ஒரு பகுதியாய் இருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக பிறக்கும் பொழுது ஒரு புதிய சிருஷ்டிப்பாய் அல்லது ஒரு புது சிருஷ்டியாய் ஆகிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் ஒரு பாகமாக ஆகிறீர்கள். 59. நான் பிரான்ஹாம் குடும்பத்தில் பிறந்தபொழுது, நான் பிறப்பினால் ஒரு பிரான்ஹாமானேன். அதே விதமாகத்தான் நீங்களும் கிறிஸ்துவின் பாகமாக ஆகின்றீர்கள். நீங்கள் உள்ளே பிரவேசிக்கின்ற வழியானது புதிய பிறப்பின் மூலமே உள்ளது. அது உண்மை . அந்தவிதமாகத்தான் நீங்கள் வழிக்குள் செல்கிறீர்கள். இயேசு, “நானே வழியாய் இருக்கிறேன்” என்றார். நாம் அதன் பேரில் நீண்ட நேரம் தரித்திருக்க முடியும். 60. ஆனால் அடுத்த காரியம் அவர், அவர் சத்தியமாயிருக்கிறார். அவரைத் தவிர வேறு யாரிடத்திலும் அல்லது வேறெங்கிலும் சத்தியமே இல்லை . 61. ஓ, இன்றைக்கு நாம் பெற்றுள்ள மார்க்க சம்மந்தமானவர்கள் சென்று, "நல்லது, இப்பொழுது நாங்கள் சத்தியமாய் இருக்கிறோம், நாங்கள் சத்தியத்தை பெற்றுள்ளோம்" என்று கூறுகிறார்கள். நாம் ஒரு சபைக்கு போகிறோம். அவர்கள், "நாங்கள் சத்தியத்தை உடையவர்களாக இருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். இன்னொரு சபைக்கு சென்றால், அவர்களும், "எங்களுடைய கோட்பாடுகள், நாங்கள் சத்தியத்தை உடையவர்களாயிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். நாம் மற்றொன்றிற்கு செல்ல, அவர்களும் பழைய காலத்து போதனை கோட்பாடு முறையை நாங்கள் உடையவர்களாக இருக்கிறோம். நாங்கள் சத்தியத்தை உடையவர்களாயிருக்கிறோம்'' என்கிறார்கள். 62. அவரே சத்தியமாயிருக்கிறார் என்று இயேசு கூறினார். எனவே இயேசுவை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வரைக்கும் நீங்கள் சத்தியத்தை உடையவர்களாக இருக்க முடியாது. நீங்கள் எப்படி அவரை பெற்றுக் கொள்கிறீர்கள்? மறுபடியுமாய் பிறப்பதன் மூலமே. ஆனால் நீங்கள் இயேசுவை பெற்றுக்கொள்ளும் வரையில் நீங்கள் சத்தியத்தை உடையவர்களாய் இருக்கவே முடியாது. 63. நீங்கள் இயேசுவுக்குள்ளாக இருக்கும் வரை நீங்கள் வழியில் இருக்கவே முடியாது. நீங்கள் எப்படி அவருக்குள் வருகிறீர்கள்? "எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்". அப்பொழுது நீங்கள் இயேசுவுக்குள்ளாய் இருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் வழியில் இருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் சத்தியத்திலிருக்கிறீர்கள். இயேசு, "நானே வழியும், சத்தியமும் இருக்கிறேன்" என்றார்.  64. இன்னொரு காரியம், மூன்றாவது காரியம். இயேசு, நாம் அவரிடத்தில் வந்திருக்கிறோம். அவரே அங்கே இருக்கின்றதான ஒரே ஒளியாய் இருக்கிறார். அது உண்மை . ஓ, அதனோடு வித்தியாசமாய் இருக்க விரும்புகிறோம். ஆனால் அது உண்மையாயிருக்கிறது. அங்கே இருக்கின்றதான ஒரே ஒளி இயேசுவே. நீங்கள், “நான் ஒரு ரஸ்ஸலைட், கேம்பிளைட்" என்கிறீர்கள். 65. நீங்கள் என்னவாயிருந்தாலும் சரி, அது ஒரு போலியான ஒளியா யிருக்கிறது. நீங்கள் ரஸ்ஸலைட் சபையில் இருக்கலாம். நீங்கள் கேம்பிளைட் சபையில் இருக்கலாம், அல்லது வேறு ஏதாவது "ஒளியின்” சபையில் இருக்கலாம். ஆனால் நீங்கள் இயேசுவுக்குள் வரும் வரைக்கும் நீங்கள் ஒளியில் இல்லை. நீங்கள் இன்னமும் இருளில் தான் இருக்கிறீர்கள். நீங்கள் அவரிடத்தில் வரும் வரைக்கும் நீங்கள் வெளிச்சத்தை உடையவர்களாய் இல்லை. ஏனென்றால் அவரே வழியும், சத்தியமும், ஒளியும், தேவனிடத்திற்குப் போகும் ஒரே வழியுமாய் இருக்கிறார். "என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.'' எனவே உங்களால் தேவனிடத்திற்குப் போக முடியாது. உங்களால் பரலோகத்திற்குப் போகமுடியாது.  66. நீங்கள் வழியில் தான் செல்ல வேண்டும். இயேசுவே அந்த வழியாய் இருக்கிறார். அங்கே சத்தியமாயிருக்கிற ஒருவர் அவரே. அவர் ஒருவரே ஒளியாய், உண்மையான ஒரே ஒளியாயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவே உண்மையாய் வெளிப்பட்டதான ஒரே ஒளியாய் இருக்கிறார். நாம் மார்மோன் ஒளியை உடையவர்களாய் இருக்கிறோம். நாம் மெதோடிஸ்டு ஒளியை உடையவர்களாய் இருக்கிறோம். நாம் பாப்டிஸ்டு ஒளியை உடையவர்களாய் இருக்கிறோம். நாம் பெந்தெகோஸ்தே ஒளியை உடையவர்களாய் இருக்கிறோம். நாம் எல்லாவிதமான ஒளிகளையும் உடையவர்களாய் இருக்கிறோம். ஆனால் இயேசுவே உண்மையான ஒளியாயிருக்கிறார். அவர் மட்டுமே ஒளியாய் இருக்கிறார்.  67. நாம் பிள்ளைகளாயிருக்கிறோம். நாம் மறுபடியும் பிறந்திருப் போமானால் நாம் பகலின் பிள்ளைகளாய் இருப்போம். 68. உலகத்தின் பிள்ளைகள் இருளில் நடக்கிறார்கள். அவர்கள் இரவு நேரத்தில் நடக்கிறார்கள். அவர்கள் இருளை விரும்புகிறார்கள். வேதம், "ஜனங்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளையே விரும்புகின்றனர். மனுஷர் அதையே விரும்புகின்றனர். ஏனென்றால் ஒளியானது அவர்களுடைய கிரியைகளை வெளிப்படச் செய்கிறது” என்று கூறியுள்ளது. 69. சூரியன் எழும்பி உயரே வரட்டும். ஒவ்வொரு முதிர்ந்த பல்லியும், ஒவ்வொரு முதிர்ச்சியடைந்த மூட்டைப்பூச்சியும், இருண்ட ராஜ்ஜியத்தின் பூச்சிகளும், இரவிலே நகருகிறதெல்லாம், எதன் கீழாவது சென்றடைந்து விடும். சுவிசேஷ ஒளி பிரகாசிக்கத் துவங்கும்போது அதே விதமாகவே ஒவ்வொரு பொல்லாத செயலும் எதன் கீழாவது நகர்ந்து செல்ல முயற்சிக்கும். அவர்கள், "ஓ, நாங்கள் பெற்று விட்டோம் - நாங்கள் ஒளியை பெற்றுள்ளோம், ஏனென்றால் நாங்கள் - நாங்கள் இரவு நேரத்தில் ஜீவிக்கிறோம்” என்கிறார்கள். நீங்கள் இரவு நேரத்தில் ஒளியில் நடந்தால், நீங்கள் ஏதோ செயற்கை ஒளியின் கீழ் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு உண்மையான பகல் வெளிச்சம் மட்டுமே உண்டு. அது சூரிய வெளிச்சமாகும்.  70. ஒரே ஒரு உண்மையான கிறிஸ்தவ ஒளி மட்டும்தான் உண்டு. அது தேவ குமாரனுடைய ஒளியாய் இருக்கிறது. அவரே அந்த உண்மையான ஒளியாய் இருக்கிறார். ஆம். சூரிய வெளிச்சம் ஒளியை உண்டு பண்ணுகிறது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாய் அவருக்குள் ஜீவன் இருக்கிறது.  71. எல்லா தாவர ஜீவனும் சூரிய வெளிச்சத்தினாலே வெளியே வருகிறது. கடந்த வருடத்தில் ஒவ்வொரு காரியமும் குளிர் காலத்தில் எப்படியாய் உறைந்திருந்தது, ஆனால் சூரியன் பூமியின் மேல் குளிப்பாட்டத் துவங்கினபோது என்ன சம்பவிக்கிறது? புதிய ஜீவன் வெளிவருகிறது, புதியது.  72. நான் அங்கே பின்னாக ஒரு மனிதனிடத்தில் திரு. உட்ஸ் அவர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். நாங்கள் கென்டக்கியில் இருந்தோம். நான் ஒரு மனிதனை சந்தித்தேன். அவன் ஒரு நாத்திகனாக இருந்திருக்க வேண்டும். அவன் சமீபத்தில் மரித்துப் போய் விட்டான் என்று நான் கேள்விப்பட்டேன். சகோதரன் உட்ஸ் அவனிடம் மேலே சென்று அவனுடைய நிலத்தில் நாங்கள் வேட்டையாடலாமா? என்று அவனிடத்தில் கேட்டார். அவன், "நிச்சயமாக, நீர் அணில் வேட்டையாடக்கூடும். பேங்க்ஸ், போய் வேட்டையாடுங்கள்" என்றான். அவர், ''நான் என்னுடைய போதகரை உடன் கொண்டு வந்துள்ளேன்" என்றார். 73. அதற்கு அவன், "எல்லா நேரத்திலுமே உம்மோடு ஒரு பிரசங்கியாரை நீர் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு நீர் அவ்வளவு அற்பமாகிவிட்டதை நீர் எண்ணிப் பார்க்கவில்லையா?" என்றான். மேலும் அவன் கூறினான் ........ 74. நான் என் காரை விட்டு இறங்கி அங்கு சென்றேன். அங்கே ஒரு ஆப்பிள் மரம் இருந்தது. அவனும், இன்னொரு வயதான பெருந் தன்மையான மனிதனும் அதன் அடியில் உட்கார்ந்திருந்தனர். அதன்பின் நான் ஒரு ஆப்பிளை எடுத்து, அதை சாப்பிடத் துவங்கினேன். அவர் என்னிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். நான் அறிமுக ....... சகோதரன் உட்ஸ் அவனை அறிமுகப்படுத்தினார். ''எங்களுடைய போதகரை சந்தியுங்கள்'' என்றார். 75. நான், "ஐயா, நீர் எப்படியிருக்கிறீர்?" என்றேன், பின்பு நாங்கள் கொஞ்சம் பேசியதும், அவர், நல்லது, அதாவது அவர் சபைக்கே போன தில்லையாம். அவர் எந்தக் காரியத்தையும் இழந்துவிட்டதாக அவர் அறிந்திருக்கவில்லையாம் என்பதை பற்றி பேசத் தொடங்கிவிட்டார். நானோ, "ஓ, ஆம், நீங்கள் இழந்திருக்கிறீர்கள்” என்றேன். நான் அவரை சற்றுநேரம் பேசும்படி அனுமதித்தேன். 76. கொஞ்சம் கழித்து, அவர், "இங்கே இந்த கேம்பஸ்வில், இல்லை ஆக்டான் என்ற ஒரு சிறிய பட்டணத்திலுள்ள மெதோடிஸ்டு கூட்ட மைதானத்திற்கு ஒரு பிரசங்கியார் வந்திருந்தாரே உமக்குத் தெரியுமா?'' என்றார். அந்தப் பிரசங்கியார் இதற்கு முன்பு இந்த தேசத்திற்கு வந்ததே இல்லை. மூன்று இரவுகள் கூட்டத்தில் அங்கே ஓர் இரவு அவர் பிரசங்கித்துக் கொண்டிருக்கையில் அவர் அங்கே கூட்டத்தின் ஊடாக நோக்கி பின்னால் இருக்கிறவர்களைப் பார்த்து, அங்கே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு, அவள் மலையின் மேல் இங்கே வசித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய சகோதரி புற்றுநோயினால் மரித்துக் கொண்டிருப்பதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள்” என்றார். மேலும், "உன்னுடைய குறிப்புப் புத்தகத்தில் நீ ஒரு கைக்குட்டையை வைத்திருக்கிறாய் என்று கூறி, அந்த கைக்குட்டையை கொண்டுபோய் அந்த ஸ்திரீயின் மேல் வை. அவள் சுகமடைவாள்'' என்றார். 77. மேலும், "அந்த காலையில் மனைவியும் நானும் அங்கே உயரே சென்றிருந்தோம். நாங்கள் அந்த வயதான ஸ்திரீயை ஒரு துப்பட்டியில் திருப்பி படுக்க வைத்தோம். அவள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான வருடங்களாகவே படுக்கையை விட்டு எழும்பினதே இல்லை. வயிற்றுப் புற்று நோயாயிருந்தது. அவள் தண்ணீரைக் கூட தன்னுடைய வயிற்றில் வைத்திருக்க முடியாதிருந்தது'' என்றார். 78. மேலும், "அந்த சகோதரி கூட்டத்தை விட்டு எழுந்து அந்த இரவே புறப்பட்டு வந்து கைக்குட்டையை அந்த ஸ்திரீயின் மேல் வைத்தாள்'' என்றார். தொடர்ந்து, "அடுத்த நாள் காலையில் அவள் முட்டைகளையும், பன்றி இறைச்சியையும் சமைத்துக் கொண்டும், சிற்றுண்டியை ஆயத்தப்படுத்திக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்தாள்'' என்றார். 79. 'அவள் அங்கே உயரே இருந்து வருகிறாள். இது மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்தது" என்று கூறி, "அவள் இன்னமும் நன்றாகத் தான் இருக்கிறாள்" என்றார். 80. அவர், "அவர் எப்பொழுதாவது இந்த தேசத்திற்கு திரும்ப வந்தால், நான் அவருக்கு செவி கொடுக்கப் போகிறேன்" என்றார். "ஏனென்றால் வாசிப்பதற்கு உள்ள ஒரு கூட்ட வார்த்தைகளை காட்டிலும் சந்று அதிகமாய் அது காணப்படும்படியாக அவர் ஏதோ ஒரு காரியத்தை உண்டு பண்ணினார். அது ஜீவித்துக் கொண்டும் உயிரோடிருக்கிறது மான ஏதோ காரியத்தை அறிமுகப்படுத்தியது. அவள் அங்கே அந்த குன்றின் மேல் ஜீவித்தாள் என்று அவருக்கு எப்படித் தெரியும்?" என்றார். 81. நான் சகோதரன் உட்ஸை நோக்கிப் பார்த்து, என் தலையை அசைத்தேன். நான் அங்கே முழுவதும் சேறாய், வேட்டையாடினதிலிருந்த அணில் இரத்தம் முதலானவைகள் என்மேல் இருக்க அங்கே நின்று கொண்டிருந்தேன். அங்கே உயர பிரசங்கித்துக்கொண்டிருந்தது நான் தான் என்ற ஒரு எண்ணமே அவருக்கு இல்லாதிருந்தது. எனவே அவர் - அவர் அங்கே சற்று தள்ளி நின்றிருந்தார், இல்லை சரியாகக் கூறினால் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தார்.  82. நான், "ஐயா, தேவனைப் போன்று காணப்பட்ட ஏதோ ஒன்றை உம்மால் காணமுடிந்ததானால், தேவன் ஏதோ இயற்கைக்கு மேற்பட்ட ஒரு காரியத்தைச் செய்தார் என்றா நீர் சொல்கிறீர்?" என்றேன். 83. "ஓ, ஆமாம்”, அவர், “அது என்னை விசுவாசிக்கும்படி செய்யும்” என்றார். நான், "ஆம் ஐயா” என்றேன். நான், “இந்த ஆப்பிள் மரத்திற்கு என்ன வயதாகிறது?" என்றேன். 84. அவர், "சுமார் 30 வருடங்கள் ஆகிறது. நான் அதை அங்கே ஒரு குறிப்பிட்ட வருடத்தில் நட்டேன்'' என்றார். “இது ஒவ்வொரு வருடமும் ஆப்பிள்களைக் கொடுக்கிறதா?” என்றேன். “ஆம்” என்றார்.  85. நான், "இது கிட்டத்தட்ட சரியாக ஆகஸ்டு மாதத்தின் பாதியாய் உள்ளது. நாம் உறைந்து போகுதலிலோ அல்லது குளிர்காலத்திலோ இல்லை" என்றேன். நான், "உஷ்ணமான கோடையைத் தவிர நமக்கு எந்த சீதோஷ்ண நிலையும் இல்லாமலிருக்கிறது. அந்த மரத்திலிருந்த இலைகளெல்லாம் உதிர்ந்து போகின்றதே அது எப்படி? ஏன் என்று எனக்குச் சொல்லும்?" என்றேன். அவர், “ஜீவன் திரும்பவும் பூமிக்குள்ளாக சென்றுள்ளது” என்றார். 86. நான், "அது திரும்பிப் போகவில்லையென்றால் அப்பொழுது அந்த மரமானது குளிர்காலத்திலே மரித்து விடாதா?" என்றேன். 87. அவர், ''அது உண்மை . ஜீவன் உயர மரத்திலேயே இருந்தால் அதைக் கொன்று போடும். எனவே அது திரும்பி அதன் வேர்களிடத்தில் போய் மறைந்து கொள்ள வேண்டும்'' என்றார். 88. நான், "அந்த ஜீவனை இங்கே கோடை காலத்தின் மத்தியில் எந்த அறிவுத்திறம் அதை கீழே வேர்களுக்கு அனுப்பி, குளிர் காலத்தினூடாக ஜீவிப்பதற்கும், அடுத்த வசந்த காலத்தில் திரும்பி வருவதற்கும், உங்களுக்கு மற்றொரு அறுவடையான ஆப்பிள்களை கொண்டு வரும்படி செய்கிறது எது என்று நீர் எனக்குச் சொல்லும்.'' நான் உமக்குச் சொல்வேன். என்னிடத்தில் சொன்ன அதே ஆவிதான் அந்த ஸ்திரீயை போய் அந்த கைக்குட்டையை அவள் மீது வைக்கச் சொல் என்று கூறினது. அது அதே தேவனாய் இருக்கிறது'' என்றேன். அவர், “நீர் தான் அந்த பிரசங்கியாரோ?” என்றார்.  89. நான், 'ஆம் ஐயா, நான் தான்" என்றேன். நான், "நீங்கள் பாருங்கள், நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை ஒரு கூட்டத்தில் எதிர் பார்க்கிறீர்கள். ஆனால் தேவனோ சரியாக உம்மைச் சுற்றிலும், எல்லா இடத்திலும் இருக்கிறார். உம்மால் அதைக் காண்பதிலிருந்து விலகியிருக்க முடியாது. இயற்கையை கவனியுங்கள்” என்றேன். 90. இப்பொழுது ஒரு சில ஜனங்கள் சூரிய வெளிச்சத்தில் நடக்க மறுக்கலாம். அப்படிப்பட்டதொரு நபராய் இருந்தால் என்ன? அதாவது, "ஓ, சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கவில்லை. இல்லை ஐயா, நான் அதை நம்புவதில்லை," என்று கூறுவதாகும். தன்னுடைய அடித்தளத்திற்கு ஓடிப்போகிறான், “நான் இருட்டாகும்போது மட்டுமே வெளியே வருகிறேன், நான் வரும்போது .......” என்று கூறுதல். அவன் சூரியனின் உதவியை மறுக்கிறான்.நல்லது, அவன் அப்படி செய்தானென்றால், அது- அது அவனுடைய சொந்த புத்தியில்லாத தன்மையாய் இருக்கிறது. அவ்வளவுதான். சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. யாரோ ஜன்னலண்டை வந்து, ஜான், "வெளியே வா, சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது” என்று சத்தமிடுகிறார்கள்.  91. "நான் அப்படிப்பட்ட காரியத்தை நம்புவதற்கு நான் மறுக்கிறேன். அது வெறித்தனமாய் உள்ளது". இப்பொழுது அவன் உண்மையாகவே சூரியனின் சூட்டைத் தவற விடுகிறான். அவன் அந்த ஜீவனைக் கொடுக்கும் கதிர்கள் அளிக்கின்றதை நிச்சயமாகவே தவறவிடுகிறான். அவன் அது காட்டுகின்ற அழகையும், அது வெளிக்கொண்டு வருகிறதான ஜீவனையும் நிச்சயமாகவே தவற விடுகிறான்.  92. அந்த விதமாகத்தான் ஒரு புருஷனோ அல்லது ஒரு ஸ்திரீயோ இயேசு இல்லாமல் ஒரு கோட்பாட்டின் மூலமாக பரலோகத்திற்கு போக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சபையின் மூலமாக பரலோகத்திற்குப் போக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதைச் செய்ய முடியாது. அவரே வழியும், சத்தியமும், ஒளியுமாய் இருக்கிறார். 93. சூரியன் எல்லா தாவரத்திற்கும் ஜீவனைக் கொண்டு வருகிறது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாய் குமாரன் நித்திய ஒளியைக் கொண்டு வருகிறார். அவர் மட்டுமே நித்திய ஒளியை உடையவரா யிருக்கிறார். அதனால்தான் நாம் அவரிடத்தில் வர வேண்டும். நாம் அதை ஒரு சபையின் மூலமாகத் தவற விடுவோம். நாம் ஒரு மட்டுமே வந்து நித்திய ஒளியைக் கண்டடைய முடியும். அவரிடம் மாத்திரமே பேதுரு, “நீர் ஒருவர் மட்டுமே அதை உடையவராயிருக்கிறீர். அந்த காரணத்திற்காகத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். அதைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். அதைப் பெற்றுக் கொள்ளும்படியாகவே நாங்கள் உம்மிடத்தில் வருகிறோம்” என்றான். 94. இப்பொழுது அந்த சூரிய வெளிச்சம் பிரகாசிக்கத் துவங்கும் பொழுது நீங்கள் கவனியுங்கள். ஏன், ஜீவிக்கக்கூடிய வித்தேயல்லாமல் நிலத்தில் வேறு வித்து ஏதும் இருக்காது. அது அதற்கு உதவி செய்ய முடியாது. 95. உங்களுடைய வீதியில் நீங்கள் ஒரு நடைபாைைதயில் அல்லது உங்களுடைய வழியில் நான்கு அடி அகலத்திற்கு அதின்மேல் காரையைப் போட்டு வையுங்கள். நீங்கள் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கும்படி விடுங்கள். புல்லானது மேலே வரும். எங்கே உங்களுக்கு அதிகமான புல் கிடைக்கும்? சரியாக அதன் சுற்றியுள்ள ஓரங்களிலே . அது என்னவாயிருக்கிறது? அது அந்த வேர்களாயிருக்கிறது. நீங்கள் சூரியனிடத்திலிருந்து ஜீவனை மறைத்து வைக்க முடியாது. அந்த சூரியன் பிரகாசித்துக் கொண்டே போகிறது. அந்த சிறிய வேர்கள் ஒதுக்கிடமாயிருந்தால் ஒரு நூறு அடி கெஜ தூரத்திற்கு வேர்கள் சுற்றிக் கொண்டு வரும். அதுதான் உங்கள் நடைபாதையில் இருந்ததான புல். ஒளியானது பிரகாசித்துக் கொண்டிருக்கையில் அந்த ஒன்று அங்கே அடியில் கிடந்தது. ஒளியானது பிரகாசிக்கும் பொழுது ஜீவனானது அதனுடைய ஜீவியத்திற்கு வருகிறது. 96. தேவனுடைய குமாரன் ஒரு இருதயத்தின் மேல் பிரகாசிக்கும் பொழுது நித்திய ஜீவனானது ஜீவியத்திற்கு வருகிறது.  97. "நானே வழியும், சத்தியமும், ஒளியுமாயிருக்கிறேன்”. நாம் வந்தாக வேண்டியதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. 98. நான்காவது என்னவென்றால் எந்தக் காரியத்தையும் அதன் மேல் வைத்துக்கட்ட இயேசு மட்டுமே பாதுகாவலான, அசையாத அஸ்திபாரமாயிருக்கிறார். அது உண்மை . அது மேலே வைத்துக் கட்டக்கூடிய அஸ்திபாரமாய் மட்டுமே இருக்கிறது. மற்றெல்லா அஸ்திபாரங்களும் சொறி மணல்களாயிருக்கின்றன. நான் கிறிஸ்து என்றும் உறுதியான கன்மலையின் மேல் நிற்கிறேன். மற்றெல்லா நிலங்களும் சொறி மணல்களாய் உள்ளன. 99. அதிகமான ஜனங்கள் ஐசுவரியத்தின் மேல் கட்டுகிறார்கள். அவர்கள் வேலை செய்ய முயற்சித்து, அவர்களால் எவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியும் என்று பார்க்கிறார்கள். அவர்கள், "நான் அதை செலவழிக்க முடியவில்லையென்றாலும், எனக்குப் பின்னால் என்னுடைய பிள்ளைகள் செலவழிப்பார்கள்" என்கின்றனர். அது என்ன செய்கிறது? அது அடிமைத்தனத்திற்கு திருப்பி வழி நடத்துகிறது. நீங்கள் உங்கள் பணத்திற்கு ஒரு அடிமையாகி விடுகிறீர்கள். அநேகர் அப்படி இல்லாமல் இருக்கலாம். ஒருக்கால் ....... நீங்கள் அந்த விதமான ஒரு கோடீஸ்வரனாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் வெறுமனே பணத்தை இச்சிக்க முடியும், அப்பொழுது நீங்கள் ஒரு கோடீஸ்வரனைப் போன்று குற்றவாளியாய் இருக்கிறீர்கள். புரிகின்றதா? நரகத்தில் அங்கே கோடீஸ்வரர்கள் இருப்பதுபோன்று, அங்கே பிச்சைக்காரர்களும் இருப்பார்கள். ஏனென்றால் அது தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறதான அதன் பேரிலுள்ள உங்கள் மனப்பான்மையாய் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் அதை ஐசுவரியங்களின் மேல் கட்டினால் அது விழுந்துபோகும்.  100. ஆகையால் இந்த அமெரிக்காவானது மேலே வைத்துக் கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிற மகத்தான ஒரு காரியம் உண்டு. அது புகழின் அஸ்திபாரத்தின் மேல் கட்டும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறது. வாலிபப் பெண்கள், வாலிபப் பையன்கள், அவர்கள் அந்த தொலைக் காட்சி நட்சத்திரங்கள், சினிமா நட்சத்திரங்கள் அவர்களை நோக்கிப் பார்த்து, அவர்களைப் போன்று நடந்து கொள்ளவும், உடுத்திக் கொள்ளவும், அவர்களைப் போன்று நடித்துக் காட்டவும் முயற்சிக்கிறார்கள். அது என்ன செய்கிறது? குழப்பமான, பழுதடைந்த ஜீவியத்திற்கு வழி நடத்துகிறது. அதனுடைய துரும்பும், வைக்கோலும் நியாயத்தீர்ப்பிலே சுட்டெரிக்கப்படும். 101. இயேசுவே ஒரே அஸ்திபாரமாய், ஒரே நிச்சயமான அஸ்திபாரமாய் இருக்கிறார். அந்தக் காரணத்தினால் தான் நாம் அவரிடத்தில் வரவேண்டும். வேறு யாரும் அந்த அஸ்திபாரத்தை உடையவர்களாய் இல்லை. ஐசுவரியங்கள் அதை உடையதாய் இல்லை. கீர்த்தியானது அதை உடையதாய் இல்லை. 102. இன்றைக்கு நாம் அவ்வளவு அதிகமான கட்டிட அஸ்திபாரங்களை உடையவர்களாயிருக்கிறோம். ஓ, நமக்குத் தேவை....... நாம் வெறுமென ......... அமெரிக்க ஜனங்களால் சரியாய் ஒன்றையும் செய்ய முடியாது. ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வேலியைக் கட்ட வேண்டும். அவர்கள் இதைச் செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள். என்னவென்று நீங்கள் உணருகிறீர்களா? ஏறத்தாழ வெகு சீக்கிரத்தில் உங்களுடைய கட்டிடங்கள் எல்லாம் பொடிப் பொடியாகப் போகிறது. அஸ்திபாரமோ நொறுங்கும் மணலாயிருக்கிறது. 103. நம்மில் அநேகர் கல்வியின் மேல் கட்டிக் கொண்டிருக்கிறோம். பள்ளிக்குப் போவதற்கு நாம் உபாத்தியாயர்களையும் கூட பெற முடியவில்லை. நாம் அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது அதெல்லாம் சரிதான். பள்ளிக்கூடம் அதன் ஸ்தானத்தில் சரியாயிருக்கிறது. ஆனால் அதனால் ஒருபோதும் கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுக்க முடியாது. இல்லை ஐயா. இப்பொழுது நாம் பெற்றுள்ளதோ ......... உபத்தியாயர்கள் கூட கிடைப்பதில்லை. ஜனங்கள் அவர்களுக்கு போதிக்க கூட முயற்சிக்காத அளவிற்கு நம்முடைய இருபது வயதிற்குட்பட்டவர்கள் மிகவும் முரட்டுத்தனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். குட்டி ஆஸ்வால்டும், லெஸ்ஸும் மற்றும் அவர்கள் அனைவருமே அவர்கள் உபாத்தியாயரை கட்டிடத்தை விட்டு வெளியே ஓடும்படி செய்கிறார்கள். அவர்கள் ஒரு எதிர்ப்பை தெரிவிப்பார்கள். அவர்கள் போராட்டம் செய்வார்கள். அவர்கள் பள்ளியை மூடுவார்கள். நான் அவர்களை குற்றஞ்சாட்டவில்லை. நான் அதனின்று வெளியேற முடிந்தால் அல்லது நான் ஒரு பள்ளி உபாத்தியாயராய் இருக்க மாட்டேன். 104. ஆனால் நாமோ கல்வியைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது கல்வி, அதெல்லாம் பரவாயில்லை. நாம் எழுதப்படிக்க தெரியாத ஒரு கூட்டத்தை விரும்புகிறதில்லை. ஆனால் கல்வி அதன் ஸ்தானத்தில் இருக்கும்படியாக நாம் விரும்புகிறோம். ஆனால் இன்றைக்கு அதன் தொல்லை என்னவென்றால், நாம் நம்முடைய பிரசங்க பீடத்தில் கல்வியளிக்க முயற்சித்தோம். நாம் அதைச் செய்தபோது நாம் வெளியேறும் பாதையை எடுத்துக் கொண்டோம். கிறிஸ்துவே அந்த அஸ்திபாரமும் அந்த வழியுமாயிருக்கிறார். நாம் கல்வியை வைக்கும் பொழுது ...... கல்வி அதெல்லாம் சரிதான். 105. ஆனால் கவனியுங்கள். அநேக சமயங்களில் கல்வியானது கல்வியின் பிசாசினிடத்திற்கு வழிநடத்துகிறது. அந்தக் கல்வியின் பிசாசு உங்களை அறிவினிடத்திற்கு வழிநடத்துகிறது. நீங்கள் அங்கே அதை பெறும்போது அப்பொழுது நீங்கள் ஒரு நாத்திகனாகவும், கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களுமாகிறீர்கள். எனவே நீங்கள் கல்வியின் அஸ்திபாரத்தின் மேல் கட்டமுடியாது.  106. நாம் அரசியல் அதிகாரங்களின் மேலும் இதை கட்டமுடியாது. நீங்கள், "நல்லது, என்னே, நான் மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன். நான் ஒரு ஜனநாயகன், நான் ஒரு குடியரசைச் சார்ந்தவன். நான் என்கிறீர்கள். இரண்டு சாராருமே அழுகிப் போனவர்கள். 107. ஒரே ஒரு அஸ்திபாரம்தான் உண்டு. கிறிஸ்துவின் மேல் கட்டுங்கள். இயேசு கிறிஸ்துவையல்லாமல் வேறே எந்த அஸ்திபாரத்தின் மேலும் இந்த தேசம் கட்டப்பட வேண்டியதில்லை. சரி, வேறொரு அஸ்திபாரமும் போடப்படவில்லையே. நீங்கள் பரலோகத்திற்கு போவதற்கு வேறொரு அஸ்திபாரமும் இல்லையே. இயேசு கிறிஸ்துவின் அஸ்திபார மேயல்லாமல் வேறு எந்த அஸ்திபாரமும் பாதுகாப்பானதாய் இல்லையே. 108. சில காலத்திற்கு முன்னர் நியூயார்க் பட்டணத்தில் நான் என் ஊழியக்கார நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது, நான், "ஓ, அந்த மகத்தான கட்டிடம்! ஓ!" என்றேன். நான், " அங்கே பாரும். அது ஒரு வேளை ஐம்பது அல்லது அறுபது மாடியாக இருக்கலாம். ஓ! அது ஒரு மிகப்பெரிதான பெரிய ஸ்தலமா யிருக்கிறது. இது எவ்வளவு அழகாக இருக்கிறது" என்றேன். நான், “நல்லது அங்கு ஒருவரும் இல்லையே” என்றேன். அவரோ, “இல்லை, அங்கே இருக்கமாட்டார்கள்” என்றார்.  109. நான், "என்ன விஷயம்?" என்றேன். அந்த கட்டிடத்தைக் கட்டுவதற்கு அந்த கட்டிடத்திற்கு ஏறத்தாழ என்ன செலவாகியிருக்கும் என்று லட்சக்கணக்கிலுள்ள மதிப்பீட்டை அவர் என்னிடம் தெரிவித்தார். நல்லது, நான், “ஏன் யாரும் அதற்குள் குடிபோகவில்லை ?” என்றேன். 110. அதற்கு, “ஏறக்குறைய அந்தக் கட்டிடம் எல்லாம் முடிக்கப்பட்டு, வெளிப்புறமான எல்லா மெருகேற்றுதலும், எல்லாக் காரியங்களும் முடிந்த பின்னர், "அந்த அஸ்திபாரம் சரியாக இல்லை என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். ஏதோ ஒருவிதமான மாக்கல்லின் மேல் அஸ்திரபாரம் போடப்பட்டிருந்தது. ஒரு உண்மையான கல்லின் மேல் அல்ல. ஆகையால் அந்தக் கட்டிடம் தீர்த்தொதுக்கப்பட்டது. ஆக அது ஒரே ஒரு காரியத்திற்கு தான் பயன்பட்டது. அதாவது அந்தக் குத்தகையாளர் அதன் உச்சியில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள பயன்பட்டது'' என்றார்.  111. வெளிப்புறமாக எவ்வளவு அழகாக காணப்பட்டாலும் கவலை இல்லை. இயேசு கிறிஸ்துவின் அஸ்திபாரமேயல்லாமல் வேறொரு நிச்சயமான அஸ்திபாரமேயில்லை. அவரே மேல் வைத்துக் கட்டத் தக்கதான உண்மையான அஸ்திபாரமாயிருக்கிறார்.  112. மெக்ஸிகோ, ஒரு அழகான பட்டணம்; இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் அங்கிருந்தேன். அங்கேதான் அந்த சிறிய மரித்த குழந்தை ........... 113. சற்று முன்பு பட்டணத்தில் நான் ஒரு மனிதனை, அவனால் முடிந்த அளவு குடித்திருந்த அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தேன். அவன், “ஒரு நேரம் நீர் நின்று கொண்டிருந்ததை, சங்கை டாக்டர் அல்லது வேறு எதையோ நான் பார்த்திருக்கிறேன்" என்றான். அவன் ஒரு கத்தோலிக்கன், அவன், "ஒரு மரித்துப் போன சிறிய பெண்ணை மீண்டும் ஜீவனுக்கு கொண்டு வந்தீர்'' என்றான். "நான் எப்போதும் உமக்கு மரியாதை கொடுப்பேன்'' என்றான். நான், "நீ இயேசுவை அறிவாயா?" என்றேன். அவன், “நான் கத்தோலிக்கன்” என்றான்.  114. நான், "நீ எந்த சபையைச் சேர்ந்தவன் என்று உன்னை கேட்க வில்லையே' என்றேன், நான், 'நீ இயேசுவை அறிந்துள்ளாயா?” என்றேன்.  115. நான் அவனிடத்தில் அந்த சிறிய கத்தோலிக்க ஸ்திரீ அங்கே வெளியே காலை ஒன்பது மணியிலிருந்து அவளுடைய கரத்தில் ஒரு மரித்துப் போன குழந்தையோடு அன்றிரவு பத்து மணிவரை நின்று கொண்டிருந்த சம்பவத்தைக் கூறினேன். மழையோ கொட்டிக் கொண்டிருந்தது. எப்படியாய் கர்த்தர் அந்த சிறு குழந்தையை மீண்டுமாய் ஜீவனுக்குக் கொண்டு வந்தார். வைத்தியர் அதை அறிவிக்கும் வரைக்கும் நான் அதை அறிவிக்க அவர்களை விடவில்லை. "அந்த குழந்தை மரித்தது'' என்றார். அவர் அதை "அந்த காலை ஒன்பது மணிக்கே மரித்து விட்டது” என்று அறிவித்தார். அது அந்த இரவு பத்து முப்பது மணியாய் இருந்தது. அந்த சிறிய குழந்தையானது நான் அறிந்தமட்டில் இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. 116. இப்பொழுது, இந்த பட்டணத்திலேயே அது ஒரு அழகான நகரம். ஆனால் கட்டடங்களெல்லாம் பின்பக்கமாக சாயத் தொடங்குகின்றன. ஏனென்றால் அவர்கள் அழகாகவும் மெருகேற்றபட்டதுமான கட்டிடத்தைப் பெற ஒரு நவீன கால கட்டிடக் கலைஞரை அடைய அவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தனர். உலகிலேயே அழகில் அதை மிஞ்சக்கூடிய வேறு ஸ்தலம் இருக்கிறதா என நான் சந்தேகப்படுகிறேன். ஆனால் அவர்கள் போதுமான ஆழத்திற்கு சென்று கற்பாறையின் மேல் வைப்பதற்கு தவறிப்போனார்கள். 117. நண்பனே, இன்றைக்கு நம்முடைய சபைகளோடு இருக்கிற காரியம் அதுதான். பாப்டிஸ்டு, மெத்தோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகோஸ்து, நசரேயன்களோடுமிருக்கிற காரியம் அதுதான். நம்முடைய சபைகளின் மேல் சார்ந்தவர்களாய் அல்ல, நாம் தனிப்பட்ட நபர்களாக தோண்ட வேண்டியவர்களாய் இருக்கிறோம். இயேசு கூறின அந்தக் கல்லை நாம் தொடும் வரையில் நாம்தானே தோண்ட வேண்டும் "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.'' உண்மையாகவே, அவர் ஒருவரே உண்மையான அஸ்திபாரமாய் இருக்கிறார். 118. பின்னர் ஐந்தாவதாக, இன்னொரு காரியம், நான் இதை சொல்லியாக வேண்டும். அவர் ஒருவரே வெற்றியுள்ள பாதுகாப்பான சந்தோஷமும் சமாதானமுமாய் இருக்கிறார். அந்தக் காரணத்தினால்தான் நாம் அவரிடத்திற்கு வருகிறோம். ஓ, நீங்கள் முட்டாளைப்போன்று சிரிக்கக்கூடும் அல்லது இங்கிருந்து நீங்கள் வெளியே சென்று ஏதோ நகைச்சுவையை அல்லது ஏதோ காரியத்தை சில சினிமா நட்சத்திரங்கள் விரண்யமாக பேசுகையிலே உங்களுக்கு இழுப்பு உண்டாகும் வரை சிரிப்பதையும் நான் அறிவேன், அல்லது யாராவது சற்று அதிகமாகக் குடிக்கக் கொடுத்து நீ ஒரு பைத்தியக்காரனைப் போன்று சிரிக்கலாம். ஆனால் அது உனக்கு சமாதானத்தைக் கொண்டு வருகிறதில்லை. இயேசு கிறிஸ்துவண்டை வருவது போன்று வேறு ஏதும் சமாதானமோ வேறு ஏதோ சந்தோஷமோ கிடையாது. 119. நான் ஜனங்கள் அணிந்து கொள்வதை கண்டிருக்கிறேன். நான், வாலிப ஸ்திரீகள் வண்ணந்தீட்டி அவர்களுடைய புதிய கம்பளித்துணி துண்டுகளால் அவர்களை சுற்றிக்கொண்டு சந்தோஷமாய் இருப்பது போன்று நடிக்க முயற்சிப்பதை கண்டிருக்கிறேன். அவர்கள் சந்தோஷமாய் இருப்பதில்லை. அவர்கள் வெறுமனே ஒரு வரையப்பட்ட தீயைத்தான் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வரையப்பட்ட தீயினால் குளிர்காய முடியாது.  120. வாலிப மனிதர்கள் தன்னுடைய தசைநார்கள் மிகவும் பெரியதாய் இருக்கிறதென்றும் நீங்கள் ஒரு ஆணியை அடிக்க முடிந்தால் அது ஒரு போதும் அவனை புண்படுத்தாது என்றும், ஒரு கத்தியினுடைய கூர்மையான தகடும் அவனண்டையில் வளைந்து விடும் என்று சிந்திக்க முயற்சிப்பவர்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். சரியாக அவனுக்கு சில வருஷங்களைக் கொடுங்கள். அவன் அப்படியே வயது சென்றவனாகி, சுருங்கினவனாவான். கிறிஸ்துவுக்குப் புறம்பே நித்தியமான சந்தோஷமே இல்லை .  121. இங்கே பாருங்கள் நான் ......... இன்றிரவு உங்களில் எவருமே பரிபூரண ஆரோக்கியத்தில், உங்களுடைய குடும்பம் பரிபூரண ஆரோக்கியத்தில், உங்களைச் சுற்றிலும் உள்ள யாவரும் இங்கே இருக்கின்றீர்கள். ஆனால் இங்கே இல்லாத தாயாரைக் குறித்து என்ன? உன்னுடைய தகப்பனார் இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கவில்லை என்று உனக்கு எப்படித் தெரியும்? ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் இங்கிருந்து சற்று தூரத்தில், உங்களுடைய பிள்ளைகளில் ஒன்று கொல்லப்பட வில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? வேறு ஏதோ காரியம் சம்பவிக்கவில்லையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இன்றிரவு நீங்கள் இந்த கட்டடத்தை விட்டு வெளியே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் ஒரு இருதய பாதிப்பால் கீழே விழலாம். உங்களுக்குத் தெரியாது. ஆக கிறிஸ்துவுக்குப் புறம்பாக நித்தியமான சந்தோஷமே இல்லை. அந்தக் காரணத்தினால்தான் நாம் அவரிடத்தில் வந்தாக வேண்டும். 122. நீங்கள் விஸ்கி குடிக்கலாம். நீங்கள் சந்தோஷம் கொள்ளலாம். நீங்கள் உலகத்தின் காரியங்களை உடையவர்களாய் இருக்கக்கூடும். ஆனால் அவைகள் வெற்றியான சந்தோஷங்கள் அல்ல. அவரைப்போன்று சமாதானத்தை வேறொன்றாலும் கொடுக்க முடியாது. அவர் சமாதானத்தை கொடுக்கிறார். "ஓ”, நீங்கள்”, “என்னிடத்தில் சமாதானம் உண்டு” என்கிறீர்கள். 123. உங்களிடத்தில் எப்பொழுதாவது உண்மையான சமாதானம் இருந்திருந்தால், நீங்கள் இயேசுவை உடையவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுவை உடையவர்களாயில்லையென்றால் நீங்கள் அவரிடத்தில் வரும் வரைக்கும் சமாதானம் என்றால் என்ன என்று கூட உங்களுக்குத் தெரியாது.  124. நான், ஜனங்களை, இராஜாக்களை, சர்வாதிகாரிகளை, மகத்தான மனிதர்களை, உடற்பயிற்சிப் போட்டியாளர்களை, சினிமா நட்சத்திரங்களை மற்றும் இன்னும் எல்லாவற்றையுமே கண்டிருக்கிறேன். அவர்கள் சமாதானமுள்ளவர்களாய் இல்லை. அவர்களை நோக்கிப் பாருங்கள், ஒரு சில நிமிடங்கள் அவர்களுடைய கண்களைப் பாருங்கள். அவர்கள் நரம்புக் கோளாறு உள்ளவர்கள். புரிகின்றதா? 125. இயேசு கிறிஸ்துவுக்குப் புறம்பான சமாதானத்தை எந்த மனிதனோ , எந்த ஸ்திரீயோ, எந்த குழந்தையோ ஒருவருமே உடையவர் களாய் இருக்க முடியாது. "என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை" புரிகின்றதா? உலகம் கொடுக்கிறபிரகாரமாக நான் உங்களுக்கு சமாதானத்தைக் கொடுக்கிறதில்லை. ஆனால் அவர் நித்திய சமாதானத்தை, ஒரு நிலையான சமாதானத்தை உடையவராயிருக்கிறார். நீங்கள் ஜீவித்தாலும், நீங்கள் மரித்தாலும், மழை வந்தாலும், சூரியன் பிரகாசித்தாலும், எப்படியிருந்தாலும் கவலையில்லை. எப்படியும் நீங்கள் சமாதானத்தை உடையவர்களாய் இருக்கிறீர்கள். 126. எனக்கு சகோதரன் ஷக்காரியன் (Shakarian) அவர் பாடும் பழைய பாடலின் எண் எனக்குப் பிடிக்கும். மகத்தான பெரிய வயோதிப நபர், ''ஆற்றைப் போன்ற சமாதானம் எனக்கு உண்டு, ஆற்றைப் போன்ற சமாதானம் எனக்கு உண்டு” என்று பாடுவார். ஓ, அது சரியே நீங்கள் சமாதானத்தை உடையவர்களாய் இருக்கும்பொழுது, நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவே உங்களுடைய சமாதானமாயிருக்கிறார். ஆக அந்தக் காரணத்தினால்தான் நாம் சமாதானத்தைக் கண்டடைய கிறிஸ்துவண்டை வர வேண்டும். 127. இப்பொழுது நான் ஆறாவது காரியமாக இன்னுமொரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். அவர் ......... இல்லை அந்த ........ ஆம், ஆறாவது காரியம், அவரே ஒருவரே நிலையான சாதனையா யிருக்கிறார். இயேசு கிறிஸ்துவிற்கு புறம்பாக நித்தியமாயிருக்க கூடியதையும் நீங்கள் சாதிக்க முடியுமென்றும், நீங்கள் அடைய முடியுமென்கிற ஏதாவது காரியத்தை எனக்குச் சொல்லுங்கள். 128. ஒரு அருமையான வீட்டைக் கட்டுங்கள். பத்து லட்சம் டாலர்களைப் பெறுங்கள். தேசத்திலேயே மிகவும் பெயர்பெற்ற ஸ்திரீயாய் இருங்கள். இதுவரை வீதிகளில் நடந்தவர்களிலேயே மிகுந்த பலமுள்ள மனிதனாய் இருங்கள். உலகினுடைய நினைவுச் சின்னமாய் இருங்கள். பரிசு சண்டைக்காரராய் இருங்கள். நீங்கள் என்னவாக இருக்க வேண்டு மானாலும் இருங்கள். நீங்கள் சிக்கிக்கொள்ளாமலும், கவிழ்க்கப் படாமலும், மரிக்காமலும் இருக்கிறீர்களா என்று பாருங்கள். சரி, அதைச் செய்வதற்கு சில சூரியன்களேயன்றி மற்றொன்றினாலும் முடியாது. 129. ஆகையினால் ஒரே நித்திய சாதனையாய் இருப்பது இயேசு கிறிஸ்துவே ஆகும். அங்கே நாம் வெற்றியடையக் கூடியதான மிக உயர்ந்ததும், மிகச் சிறந்ததுமானதுமே அவராக இருக்குமானால் அப்பொழுது நாம் அதையே நம்முடைய சாதனையாக ஆக்குவோமாக. நாம் அவரைப் பெற்றுக் கொள்கிறோம் என்ற நிச்சயத்தோடு இருப்போமாக. நீங்கள் ஒரு பிரசங்கியாக இருக்கலாம். நீங்கள் ஒரு போதகராக இருக்கலாம். நீங்கள் ஒரு உதவிக்காரராய் இருக்கலாம். நீங்கள் ஒரு சபையின் அங்கத்தினராக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய சாதனையை உடையவர்களாக இல்லையென்றால் ....... "நான் ஒரு பிரசங்கியாக ஆகும் வரைக்கும் நிற்கமாட்டேன். நான் ஒரு உதவிக்காரனாய் ஆகும்வரைக்கும் நிற்க மாட்டேன். நான் ஒரு சபை அங்கத்தினனாக ஆகும் வரைக்கும் நிற்க மாட்டேன்'' என்று நீங்கள் சாதிக்கும்படி கூறலாம். அந்தக் காரியங்களெல்லாம் சரிதான். கனத்துக்குரியவைதான். ஆனால் இங்கே கவனியுங்கள், சகோதரனே. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் குறைவாய் நிற்க வேண்டாம், அதாவது நீங்கள் ஒரு நித்திய சாதனையை உடையவர்களாய் இல்லை. ஏனென்றால் உங்களுடைய போதகர், ஆம் உங்களுடைய போதகரின் பணி சீக்கிரத்தில் மங்கி மறைந்துபோம். உங்களுடைய உதவிக்காரரின் பணி சீக்கிரத்தில் போய்விடும். உங்களுடைய சபை அங்கத்தினர்களின் எண்ணிக்கை ஜனங்களின் சிந்தனைகளிலிருந்து நீக்கப்படுவதற்கு சிலநாட்களாகும். அப்படியே கொஞ்சம் காலத்தில் நேரிடும். ஆனால் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பலனாக அடைந்திருந்தால் அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒருபோதும் மரிக்க முடியாது. 130. இப்பொழுது கடைசியாக நான் இதை கூற விரும்புகிறேன். நாம் இயேசுவண்டை வருவதற்கு இன்னொரு காரணமிருக்கிறது. அவர் ஒருவர் மட்டுமே மறுரூபமாக்குதலை உடையவராயிருக்கிறார். நான் அதைக் குறித்து சந்தோஷப்படுகிறேன். ஓ, அது என்ன பக்திப்பரவச மடையச் செய்கிறது. மறுரூபப்படுத்தக்கூடிய ஒரே ஒருவர். ஆம் ஐயா. 131. என்ன என்று நான் உங்களுக்குச் சொல்வேன். காலையில் அல்லது நாளை ஞாயிறாய் இருப்பதினால், திங்கள் காலையில் நீங்கள் கடைக்குச் செல்லுங்கள். நீங்கள் மருந்துக் கடைக்குச் சென்று உங்களை மகிமைக்குள்ளாக மாற்றுமளவிற்கு உங்களை அவ்வளவு பரிசுத்தமாக்கக் கூடிய சில மருந்துகளை நீங்கள் வாங்குங்கள். கல்லறையிலிருந்து மகிமைக்கு உங்களை மறுரூபப்படுத்தும் ஒரு வைத்தியர் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யட்டும். நீங்கள் மிகவும் சமர்த்தராய், எப்படி பாபேல் கோபுரத்தைப்போன்ற மற்றொன்றை கட்டவேண்டுமென்று நீங்கள் அறிந்து கொள்ளும்படி கல்வி பயின்றுள்ளீர்கள், அது அதே வழியில் முற்றுப் பெறும், கண்டறியுங்கள். வேறு ஏதாவது வழியில் போக முயற்சித்துக் கண்டறியுங்கள்.  132. கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை மட்டுமே தேவன் அவரோடு கூட கொண்டு வருவார். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மாத்திரமே பூமியிலிருந்து மகிமைக்கு மறுரூபமாக்கப்பட முடியும். அவர் ஒருவரே மறுரூபமாயும், மறுரூபமாக்கப்படக்கூடிய ஒரே வழியுமாய் இருக்கிறார். நீங்கள் அதை வாங்க முடியாது. உங்களால் முடியாது. நீங்கள் அதற்கான கிரியை செய்யமுடியாது. நீங்கள் அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். அது உங்களுக்கு ஒரு வரமாயிருக்கிறது. அதுவே உங்களை எடுத்துக் கொள்ளும் தேவனுடைய மறுரூபமாகுதல் ஆகும். 133. ஒரு வயதான மனிதனிலிருந்து அல்லது வயதான ஸ்திரீயிலிருந்து மீண்டும் ஒரு வாலிப மனிதனாகவோ, வாலிப ஸ்திரீயாகவோ மாற்றக் கூடிய ஏதோ மருந்தை இங்கே போய் வாங்குங்கள். உங்களால் அதை வாங்கமுடியுமானால் கண்டறியுங்கள். உங்களால் ஒருபோதும் முடியாது. மருத்துவ ஆதிக்கத்தில் அப்படிப்பட்ட ஒரு காரியம் உள்ளதாகவே இருக்காது. இயேசு கிறிஸ்துவுக்கு புறம்பான எந்த ஆதிக்கத்திலும் அது உள்ளதாக ஒருபோதும் இருக்காது.  134. ஆனால் அவர் இதைக் கூறியுள்ளார், “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். அவனை மறுரூபமாக்குவேன், மகிமையில் அவனை எடுத்துக் கொள்வேன்". "இந்த பூமிக்குரிய சரீரம் அழிந்து போனாலும், இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், நமக்கு ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது ." மறுரூபப்படுத்தல், வீடுகளில் பண்டமாற்றுதல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லுதல். அவர் ஒருவரே நித்திய ஜீவனை உடையவராயிருக்கிறார். அவர் ஒருவரே சந்தோஷத்தை உடையவராயிருக்கிறார். 135. நான் இதையும் கூட சொல்லலாமா? அவர் ஒருவரே ..... நீங்கள் செல்லக்கூடிய ஒரே ஸ்தலம் அவருக்குள் இருக்கிறது, அங்கே நீங்கள் அவரைக் காணமுடியும். நீங்கள் அவருக்குள் செல்லும்போது, நீங்கள் அவரை புரிந்து கொள்ளக்கூடிய ஒரே ஸ்தலம் இருக்கிறது. நீங்கள் அதை புரிந்து கொள்வதற்கு நீங்கள் அவருக்குள்ளாக வந்தாக வேண்டும், இல்லையென்றால் நீங்கள் வியந்து போய் உங்கள் தலையைச் சுற்றி அடித்துக் கொள்வீர்கள். நீங்கள் யூகித்துப் பாருங்கள். நீங்கள் ....... அது உங்களுக்கு ஒரு புதிராக இருக்கும். நீங்கள் அதை ஒருபோதும் புரிந்து கொள்ளமாட்டீர்கள். 136. அந்தக் காரணத்தினால் தான் அந்த யூதர்கள் அந்த நாட்களில், "ஏன், இந்த ஆள் பெயல்செபூலாய் இருக்கிறான். இந்த ஆள் இதுவாய், அதுவாய், மற்றதாய் இருக்கிறான்" என்றார்கள். அவர்கள் அவரிடத்தில் ஒருபோதும் வரவேயில்லை. அவர்கள் அவரை வழியாய் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஒருபோதும் அவரை சத்தியமாய், ஒளியாய், அஸ்திபாரமாய், முந்தினவராய், பிந்தினவராய், அல்பாவாய், ஒமேகாவாய், அவர் இருக்கிற மற்றெல்லா காரியங்களிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருக்கிறார். அந்தக் காரணத்தினால் தான் அவர்கள் அவரைக் கண்ட பொழுது அவர்களால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 137. பிலிப்பு வந்து, நாத்தான்வேலினிடத்திற்குச் சென்று அழைத்துக் கொண்டு வந்தான். நாத்தான்வேல் இயேசுவானவருடைய சமூகத்திற்கு நடந்து வந்தான். நாத்தான்வேல் இயேசுவானவருடைய சமூகத்திற் குள்ளாக வந்தபோது, சரியாகக் கூறினால் இயேசுவானவர், அவனை நோக்கிப் பார்த்து, "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். "ரபி நீர் என்னை எப்படி அறிவீர்” என்றான். 138. அதற்கு, 'பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்தி மரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்'' என்றார். அதாவது .......... 139. அங்கே சுற்றிலும் நின்றுகொண்டிருந்த பிரசங்கிமார்களும், ஆசாரியர்களும், அவர்கள், "இந்த மனிதன் பெயல்செபூலாய் இருக்கிறான். அவனுக்குள்ளாக அவன் பிசாசையுடையவனாயிருக்கிறான். அவன் ஒரு குறி சொல்லுகிறவன்” என்றனர். 140. இயேசுவானவர், “நீங்கள் எனக்கு விரோதமாய் பேசுகிறதை நான் உங்களுக்கு மன்னிப்பேன். ஆனால் என்றோ ஒரு நாளில் பரிசுத்த ஆவியானவர் அதே காரியத்தை செய்ய வருகிறார். அதற்கு விரோதமாய் ஒரு வார்த்தை கூறினாலும் அது இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் மன்னிக்கப்படாது'' என்றார். 141. உங்களால் எப்படி முடியும்? அவர், "உங்களுடைய சொந்த வார்த்தையே நீங்கள் தேவர்களாய் இருக்கிறீர்கள் என்று கூறும்பொழுது நீங்கள் என்னை எப்படி குற்றப்படுத்த முடியும்? தேவவசனத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினால் நீங்கள் எப்படி என்னைக் குற்றப்படுத்த முடியும்?" என்றார். 142. "நீங்கள் என் பிதாவை அறிந்திருப்பீர்களானால் நீங்கள் என்னையும் கூட அறிந்திருப்பீர்கள். அது உண்மை . அவர், "என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்' என்றார். கிறிஸ்துவல்லாமல் ஒருவனும் தேவனைப் புரிந்து கொள்ளமுடியாது. நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் தெய்வீக சுகமளித்தலையும் புரிந்து கொள்ள முடியாது.  143. ஏன், சிலர், “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்கிறீர்கள். சிறிய போதகர் அதை இங்கே பிரசங்கித்திருக்கலாம். 144. உங்களில் சிலர் தங்கள் தலைகளை சொரிந்து கொண்டு, "ஆ, நான் அதை விசுவாசிப்பதில்லை" என்று கூறியிருக்கலாம். புரிகின்றதா? அதை விசுவாசிக்க உங்களுக்கு ஏதும் நிபந்தனை கிடையாது. அப்படியே விசுவாசத்தினால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் அதைக் காண்பீர்கள். 145. இயேசு, "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, அதாவது உலக ஒழுங்கு என்னை இனிக் காணாது. இருந்தாலும் விசுவாசிகளாகிய நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனென்றால், நான் உங்களோடும், உங்களுக்குள்ளம், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால் இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளை செய்வீர்கள். நான் போன பின்பு திரும்பி வந்து உங்களோடு இருப்பேன்'' என்றார். 146. நிக்கொதேமுவோ, "நான் முதிர்வயதுள்ளவனாக இருக்கையில் நான் எப்படி மீண்டும் பிறக்க முடியும்? இரண்டாவது முறையாக நான் என் தாயின் கர்ப்பத்தில் பிரவேசிக்க கூடுமா?” என்று கேள்வி கேட்டான். 147. அவர், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காண மாட்டான்" என்றார். இப்பொழுது அங்கே இருக்கின்ற உண்மையான மொழி பெயர்ப்பு, "புரிந்து கொள்ளுதல்" என்றால் தேவனுடைய இராஜ்ஜியத்தைப் புரிந்து கொள்ளுதல் என்பதாய் உள்ளது. தேவனுடைய இராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறது. அது கிரியை செய்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டாலொழிய அதை உங்களால் உண்மையாகவே காணமுடியாது. ஆனால் அதைப் புரிந்து கொள்ளுவதற்கான ஒரே வழி நீங்கள் மறுபடியுமாய் பிறக்க வேண்டும். மறுபடியும் பிறப்பதென்பது நீங்கள் தேவனுடைய ஆவியினால் நிரப்பப் படுகின்றதாய் இருக்கிறது. அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் பொழுது, வேதத்தை எழுதின பரிசுத்தாவியானவர், கிறிஸ்துவை வெளிப்படுத்தினவர் உங்களுக்குள் அவரைத் தாமே அடையாளம் கண்டுகொள்ளச் செய்கிறவராயிருக்கிறார். ஆமென். அந்தக் காரணத்தினால் நீங்கள் அவரிடத்தில் வரவேண்டும்.  148. இன்றைக்கு அமெரிக்காவோடு உள்ள காரியம் அதுதான். இந்தக் கூட்டங்கள் தேசத்தை அப்படியே கிழக்கிலிருந்து மேற்கு, வடக்கு, தெற்கு வரைக்கும் வாரிக்கொண்டது. அந்தக் காரணத்தினால்தான் அங்கே தூரத்தில் அணுகுண்டு இந்த தேசத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காரணத்தினால் ஒரு அழிவு சமீபமாயிருக்கிறது. காரணம் தேவனுடைய கிரியைகள் வெளிப்படுத்தப்பட்டு, ஜனங்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் விலகிப்போய் விட்டனர். ஏனென்றால் அவர்களுக்கு அவர் தேவையில்லை. அவரைக் குறித்து அவர்கள் வெட்கப்படுகிறார்கள். ஓ, அவர்கள் தன்னுடைய சபையைக் குறித்து வெட்கமடையவில்லை. அவர்கள் தங்களுடைய மார்க்கத்தைக் குறித்து வெட்கமடையவில்லை. ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து வெட்கப்படுகிறார்கள்.  149. அப்போஸ்தலர்கள் தங்களுடைய சபையை விட்டு, பெந்தெகோஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட பொழுது, அது அவர்களை வெறித்தவர்களைப் போன்று தள்ளாடவும், வெவ்வேறு பாஷைகளில் பேசவும் அப்படியாய் தொடர்ந்து வியாதியஸ்தரை சுகப்படுத்துதல் முதலியனவற்றைச் செய்யும்படி ஆக்கினது. அவர்கள் ஒரு கூட்ட கல்லாதவர்களென்றும், பேதமையுள்ள ஜனங்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். வேதமோ, " அவர்கள் படிப்பு அறியாதவர்கள் என்றும், பேதமையுள்ளவர்கள், ஆனால் அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தார்கள் என்று அவர்கள் அறிந்து கொண்டனர்" என்று கூறியுள்ளது. ஏனென்றால் அவர் நடந்துகொண்ட விதமாக அவர்கள் நடந்து கொண்டனர். அவருடைய ஜீவன் அவர்களுக்குள்ளாக இருந்தது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஏனென்றால் அவர் செய்த கிரியைகளை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். 150. இயேசு பரிசுத்த யோவான் 14:7-ல் "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான் " என்றார். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். அதன் காரணமாகத்தான் நாம் இன்றைக்கு கிறிஸ்துவினிடத்திற்கு வந்தாக வேண்டும். 151. கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் பாதையின் முடிவிலிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். தேசங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். முடிவு காலம் சமீபமாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை வெளிப்படையாய் அறிவேன், நான் அதை முற்றிலுமாக அறிவேன். நான் இன்னும் அதிகமாகச் சென்று, "நான் அதை அறிவேன் என்றும், நான் விசுவாசிக்கிறேன்" என்றும் கூறுவேன். நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம். அப்படியாய் எத்தனை நாட்கள், எத்தனை வருடங்கள், அல்லது எத்தனை வாரங்கள் என்று எனக்குத் தெரியாது. ஒருவருக்கும் தெரியாது. இயேசுவுக்கும் கூட தெரியாது. அவர், "தேவன் மட்டுமே அதை அறிந்திருக்கிறார்'' என்றார். அது எப்பொழுது இருக்கும்? எந்த மணிவேளையில் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது சீக்கிரத்தில் இருக்கிறது என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் இந்தக் காரியங்களெல்லாம் அவருடைய வருகைக்கு முன்னதாக சம்பவிக்க வேண்டியவைகளாய் இருக்கின்றன. 152. கிறிஸ்துவுக்குப் புறம்பாக இருக்கின்ற என் நண்பனே, இன்றிரவு நான் உன்னை நம்பச் செய்யட்டும். உனக்கு உறுதியான அஸ்திபாரமும், வழியும், சத்தியமும், ஒளியும் வேண்டுமானால், நீ இயேசு கிறிஸ்துவை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவருடைய ஆவியினால் நிரப்பப்படு. அப்பொழுது அவருடைய ஆவியானது அசைவாடும் பொழுது, நீ அவருடைய ஆவியை அறிந்து கொள்வாய். அப்பொழுது அவர்களோடிருந்த காரியம் அதுவாகத்தான் இருந்தது. அவர்கள் அவரைக் கண்டார்கள்.  153. கிணற்றண்டையிலே அந்த ஸ்திரீ, அவள் அந்த நாளில் இருந்த பிரசங்கிமார்களில் பாதிப்பேர் தேவனைக் குறித்து அறிந்ததைக் காட்டிலும் அதிகமாக அறிந்திருந்தாள். ஏன், அவள் அவரைக் கண்டவுடனே, அவள் ....... யூதனைப் போன்று ஒரு சாதாரணமான மனிதனைப் போன்று காணப்பட்டார். அவர் அவளிடம், "ஸ்திரீயே தாகத்துக்குத் தா" என்றார். 154. அதற்கு அவள், "ஏன், நீர் யூதனாயிருக்க சமாரியர்களிடம் இதுபோன்று கேட்பது வழக்கமில்லையே'' என்றாள். 155. அதற்கு அவர், "உன்னிடத்தில் பேசிக் கொண்டிருந்தவர் இன்னாரென்பதை நீ அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் குடிப்பதற்காக கேட்டிருப்பாய். நீ இங்கு வந்து மொண்டு கொள்ளக் கூடாத தண்ணீரை நான் உனக்குக் கொடுப்பேன்" என்றார். 156. அவர் அவளை பகுத்தறியும்வரை அவர் அவளிடத்தில் பேசிக் கொண்டே சென்று, அவளுடைய கோளாறு என்னவென்பதை பிடித்துக் கொண்டார். நம் ஒவ்வொருவரும் தவறு என்னவாயிருந்தது என்று அறிவோம். அவள் ஒரு விபச்சாரியாய் இருந்தாள் என்று அமெரிக்க ஜனங்களாகிய நாம் விசுவாசிக்கிறோம். அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், ஆறாவது புருஷனோடு ஜீவித்துக் கொண்டிருந்தாள். எனவே அவர், “போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா" என்றார். அவள், “எனக்குப் புருஷன் இல்லை” என்றாள்.  157. அதற்கு அவர், நீ உண்மையைச் சொன்னாய், உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். நீ ஜீவித்துக் கொண்டிருக்கிற ஒருவனும் உன்னுடைய புருஷன் அல்ல. நீ உண்மையைச் சொன்னாய்'' என்றார்.  158. அவள், "ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். இப்பொழுது மேசியா வரும்பொழுது அந்தவிதமாக அவர் தம்மை எங்களுக்கு வெளிப்படுத்துவார் என்று நாங்கள் அறிவோம். அவர் இந்தக் காரியங் களை எங்களுக்குச் சொல்லுவார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றாள். அதற்கு அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார்.  159. அவள் தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள்ளாக போனாள். அவள் என்ன செய்திருந்தாள்? அவள் ஏற்றுக் கொண்டிருந்தாள். வெளிப்படுத்துதல் அது அவளிடத்தில் வந்தபொழுது அவள் அதை ஏற்றுக் கொண்டிருந்தாள். அவள் ஊருக்குள்ளாக ஓடி, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். இவர் மேசியாதானோ?" என்றாள். அவள் அதை ஏற்றுக் கொண்டிருந்தாள். அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள்.  160. அப்பொழுது பரிசேயர்களும், சதுசேயர்களும் அப்படியே திரும்பி, "அவன் பெயல்செபூலாக இருக்கிறான். நாங்கள் அவனோடு எத்தகைய தொடர்பும் வைக்கமாட்டோம். ஏனென்றால் அவர்களுடைய ........” என்றனர். அவர்கள் ஒரு அஸ்திபாரத்தை உடையவர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு வழியை உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் ஒரு வழியை உடையவர்களாயிருந்தனர். 161. வேதம், “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதன் முடிவோ மரண வழிகள்" என்று கூறியுள்ளது. எனவே செம்மையாய் தோன்றுகிற அந்த வழியை ஏற்றுக் கொள்ளாதீர்கள். 162. கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள். இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியினால் நிரப்பப் படுவீர்கள். அப்பொழுது பரிசுத்தாவியானவர் உங்கள் மத்தியில் அசையத் துவங்கும்போது நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். 163. சுகமாக்கப்படுவதற்கு சுகமளிப்பவர் யார் என்று அறிவதே அந்த வழியாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவே சுகமளிப்பவராக இருக்கிறார். உங்களை சுகப்படுத்துவதற்கு இன்றிரவு அவர் இங்கே வருவாரானால் அவர் எப்படி நடந்து கொள்வார்? அங்கே முற்காலத்தில் அவர் நடந்து கொண்ட விதமாகவே அவர் நடந்து கொள்வார். 164. ஒரு ஸ்திரீ கூட்டத்தினூடாக தள்ளிக்கொண்டே போய் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவர் சுற்றித் திரும்பி, "என்னைத் தொட்டது யார்?” என்றார். ஒவ்வொருவரும் அப்படியே நின்றனர். அவர் அவளைக் கண்டுபிடிக்கும் வரையில் சுற்றிலும் பார்த்தார். அவர் அவளிடத்தில், “அவளுக்கு உதிரப்போக்கு இருந்தது என்று கூறி, "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது'' என்றார். 165. அது நேற்றைய இயேசுவாய் இருந்தது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருந்தால் அது இன்றைய இயேசுவாயும் இருக்கிறது. கிறிஸ்துவை உங்களுக்குள் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் நீங்கள் அதை விசுவாசிக்க முடியாது, அதன் பின்னர் அது அவர்தான் என்று அவர்தாமே சாட்சி கொடுக்கிறார். நான் என்ன சொல்லுகிறேன் என்று உங்களுக்குப் புரிகின்றதா? [சபையார், "ஆமென்" என்கின்றனர். - ஆசி.] அவரை ஏற்றுக் கொள்வதும், அவரை பெற்றுக்கொள்வதும் அந்தவிதமாகவே இருக்கிறது. 166. இப்பொழுது நாம் ஏன் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஏழு காரணங்கள் இருக்கின்றன. நாம் வேறு யாரிடத்திற்கும் போகமுடியாது. "நீர் மட்டும்தான்”. நீங்கள் சபைக்குப் போய் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் போய் அதைப் பெற்றுக் கொள்ளத் தக்கதான ஒரு ஸ்தாபனத்தையும் நான் அறியேன். ஸ்தாபனங்களுக்கு எதிராக என்னிடத்தில் - என்னிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால் அநேக ஜனங்கள் தாங்கள் ஒரு சபையைச் சார்ந்திருக்கின்ற காரணத்தினால் அவர்கள் செய்ய வேண்டிய தெல்லாம் அவ்வளவுதான் என்று நினைக்கிறார்கள். நீங்கள் இயேசுவினிடத்திற்கு வரவேண்டும். சபையல்ல, அவரே வழியாய் இருக்கிறார். சபையல்ல, அவரே சத்தியமாய் இருக்கிறார், சபையல்ல. அவரே ஒளியாய் இருக்கிறார். சபையல்ல, அவரே அஸ்திபாரமாய் இருக்கிறார். ஒரு சபை அஸ்திபாரமல்ல. அவரே நித்திய சந்தோஷமாயும் நித்திய ஜீவனாயும், ஒரே நிலையான சாதனையாயும், ஒரே மறுரூபமாக்கு தலாயும் இருக்கிறார். அவரிடத்தில் வருவதே தேவனை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாயும், வெளிப்படுத்துதலைக் காணுவதற்கான ஒரே வழியாயும், சுகமாக்கப்படுவதற்கான ஒரே வழியாயும் இருக்கிறது. நீங்கள் அவரிடத்திற்கு வந்து, அடையாளங்களைக் கண்டு கொண்டு, அவரை விசுவாசிக்க வேண்டும். 167. இப்பொழுது நீங்கள், "நல்லது, சகோதரன் பிரான்ஹாம், அப்பேர்ப்பட்டதான கிரியைகள் செய்யப்பட்டதை நான் ஒருபோதும் கண்டதில்லையே'' என்கிறீர்கள். 168. நல்லது, நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதைக் காண்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது கூட்டமானது துவங்குவதற்கு சரியாய் ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது. அவரைக் கண்டறிய வேண்டுமென்பவர்கள், அவரை அறிந்து கொள்வதற்கு ஜெபிக்க வேண்டுமென்பவர்கள் இங்கிருக்க நான் விரும்புகிறேன். அவருடைய ஆவி இந்த கூட்டத்திற்குள் வருமானால், அவரை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளும்படி அறிந்துகொள்ள எத்தனை பேர் விரும்புவீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். "நான் அவரை அடையாளங் கண்டு கொள்ளத்தக்கதான விதத்தில் நான் அவரை அறிந்து கொள்ள விரும்புவேன்” என்று கூறுங்கள். உங்களுக்கு நன்றி.  169. நீங்கள் எப்படி அவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள்? அவர் பூமியின் மேல் இருந்துபோது அவர் செய்த அதே கிரியைகளை அவர் செய்யும் காரணத்தினாலா? இப்பொழுது பரிசுத்த யோவான் 5:19, அவர் என்ன சொன்னார்? 170. ஒரு பெரிய கூட்டமான ஜனங்கள், ஊனமுற்றவர்களாயும், முடமானவர்களுமாயிருந்த பெதஸ்தா குளத்தை அவர் கடந்து சென்றார். இயேசு அந்த இரண்டாயிரம் அல்லது அதிகமான ஜனங்கள் அருகில் நடந்து சென்றார். அவர்கள் அருகில் நடந்து சென்றார். ஒரு படுக்கையின் மேல் கிடந்த ஒரு மனிதனை அவர் கண்டார். ஏனென்றால் அவர் அறிந்திருந்தார், பாருங்கள், அதற்கு முன்பே அவர் அவனை பார்த்திருந்தார். அத்தனை வருடங்களாக அவர் அங்கே இருந்து வந்திருந்தார். அவர் சொன்னார் ........ அவன் முடமானவனல்ல. அவனால் நடக்க முடிந்தது. அவர், ''நீ சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா?" என்றார். 171. அதற்கு அவன், "என்னை தண்ணீரில் கொண்டு போய் விட என்னிடத்தில் யாரும் இல்லை. நான் போகிறதற்குள்ளே வேறொருவன் வேகமாக நடக்கக்கூடியவன் முதலில் இறங்குகிறான்” என்றான். அவன், "நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான் " என்றான். 172. அதற்கு அவர், "உன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு உன்னுடைய வீட்டிற்குப் போ” என்றார். அந்த மனிதன் அவனுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தான். 173. அவன் அவர்களை அங்கேயே விட்டு விட்டு தூர நடந்து போய் விட்டான். இப்பொழுது அது மிகவும் நலமானதாய் காணப்படவில்லையா? ஆனால் அது இயேசுவாய் இருந்தது. ஆனால் இருதயத்திற்குள்ளோ , "ஏன்?" என்றிருந்தது. 174. இப்பொழுது நீங்கள் தொடர்ந்து வாசிப்பீர்களானால், இன்னொரு வசனம், 19வது வசனத்தில், அவர் ஏன் அதைச் செய்தார் என்பதை நீங்கள் பரிந்து கொள்வீர்கள். அவர்கள் அவரைக் கேள்வி கேட்ட பொழுது அவர், "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” என்றார். அது உங்களுக்குப் புரிகின்றதா? பிதா கிரியை செய்து வருகிறதையே, நானும் இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறேன்". வேறு வார்த்தைகளில் கூறினால், "பிதா எனக்கு ஒரு தரிசனத்தைக் காட்டுகிறார். நான் என்ன செய்யச் சொல்லுகிறார் என்பதை நான் காண்பேன், அவர் என்னை என்ன கூறச் சொல்லுகிறாரோ அப்படியே நான் கூறுவேன். அவர் என்னை என்ன செய்யச் சொல்லுகிராரோ அதை மட்டுமே நான் செய்கிறேன் " என்பதாகும். 175. நல்லது, அதுதான் அஸ்திபாரம். அதுதான் சத்தியம், அது தான் வழி, அது தான் ஒளி, அல்லேலூயா! அது இயேசுவாக இருக்கிறது. “நான் அவரை ஒருபோதும் கண்டதில்லை” என்கிறீர்கள். 176. நான் இதை முடிக்கின்ற தருணத்தில் கூறுகிறேன். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் மெக்ஸிகோ வளைகுடாவிற்கு அருகிலுள்ள ஃபுளோரிடாவில் அங்கு எங்கோ அல்லது எங்கேயோ கீஸ் என்னுமிடத்தில் நடந்தது. அங்கே ஒரு - ஒரு வைத்தியர் இருந்தார். அவர் மீன்பிடிக்கச் சென்றார் என்று நான் நினைக்கிறேன். அவர் - அவர் ஒரு மிக நல்ல வழிகாட்டியாக இருப்பதாக நம்பப்பட்ட ஒரு வயதான வழிகாட்டியை, தண்ணீரிலிருந்து எப்படி வெளியே வருவதென்றும், தண்ணீருக்குள் எப்படி அவரை உள்ளே கொண்டு போவது என்பதை அறிந்து கொள்ள கூலிக்குப் பொருத்திக் கொண்டார். அந்த வயதான வழிகாட்டி படகில் ஏறிக்கொண்டு துடுப்பை கரையிலிருந்து உந்தித் தள்ளிவிட்டு, அவனுடைய துடுப்புகளோடு அங்கே சிறிது தூரம் சென்று, சிறிது நேரம் காத்திருந்தான். இன்னும் பகல் வெளிச்சம் இல்லாதிருந்தது. 177. ஒவ்வொரு காலையிலும் சமுத்திரத்தின் மேல் சுழன்று வருகிறதான, அந்த விநோதமான காற்றை அந்த நபர் உணரத் துவங்கினார். அவர் சிந்திக்கத் துவங்கி, அவர், "நாம் கடலிலே மிதந்து கொண்டிருக்கிறோம். அலையானது நம்மை கடலை நோக்கி கொண்டு செல்கிறது” என்றார். அவர் படகைக் கண்டபோது, அவர்கள் அசைந்து கொண்டிருப்பதைப் போன்று காணப்பட்டது. அவர், 'நான் அந்த வழிகாட்டியிடம் பேச விரும்பவில்லை. ஆனால் நான் ஏதாவது கூறுவது நல்லது" என்று நினைத்தார். அவர் சினங்கொண்டிருந்தார். அவர், "ஐயா, நாம் கடலில் மிதந்து கொண்டிருக்கிறோம். நாம் மிதந்து கொண்டிருக்கவில்லையா?" "சொல்லும் " என்றார். ஓ, ''அவன் நான் அப்படி நினைக்கவில்லை '' என்றான். அசைவற்ற அமைதியாயிருந்தான்.  178. கொஞ்சம் கழித்து அந்தப் படகானது கடலை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததையும், மூடுபனியும் இருளுமாய் இருந்ததை அவர் கவனித்தார். அவர், "நாம் கடலிலே மிதந்து கொண்டிருக்கிறோம். ஏதாவது செய். நீ ஒரு வழிகாட்டியாய் இருக்கிறாயே. ஏதாவது செய், சீக்கிரம், நாம் கடலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். எந்த வழியாய் நாம் திரும்பிப் போக வேண்டும்'' என்றார். 179. அந்த வயதான வழிகாட்டி, அப்படியே அவனால் அமைதியாய் இருக்க முடிந்தளவு அங்கேயே உட்கார்ந்திருந்து, ''நல்லது, அப்படியே சிறிது நேரம் காத்திரும், அப்பொழுது வெளிச்சமாயிருக்கும், அப்பொழுது நாம் எங்கேயிருக்கிறோம் என்று நாம் அறிந்து கொள்வோம்'' என்றான். 180. அப்படியே, கொஞ்சநேரம் காத்திருங்கள், தேவனுடைய உண்மையான வெளிச்சம் இன்றிரவு இந்தக் கட்டிடத்திற்குள் பிரகாசிப்பதாக. அப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். அதன் பின்னர் எந்த வழியாய் போக வேண்டும் என்பதை நீங்கள் காண்பீர்கள். நாம் ஜெபம் செய்வோமாக,  181. பரலோகப்பிதாவே, நானே வழியும், சத்தியமும், ஒளியுமாய் இருக்கிறேன். என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரான், நானே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல் என்று தேவ வார்த்தைகளில் கூறப்பட்டிருக்கிறது. "நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன்” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு முடிவிலே “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” என்று நீர் முடிவாகக் கூறுகிறீர். அதாவது, "நான் இருக்கிறேன்'' என்பது நேற்றுமல்ல, நாளையுமல்ல. அது என்றென்றைக்கும், “நான் இருக்கிறேன்” என்று மாறாததாயிருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு தலைமுறையிலும் நித்தியத்தி னூடாகவும், இன்னமும் "நான் இருக்கிறேன்" என்பதாக இருக்கிறது. இப்பொழுது நீர் இன்னமும் அந்த மகத்தான, "நான் இருக்கிறவர்" "நான் இருந்தவர்” என்றல்ல அல்லது "இருப்பவர்” என்றல்ல. இருப்பினும் நீர் இருந்தீர், நீர் இருப்பீர் ஆனால், இருப்பினும், “நான் இருக்கிறேன்” என்று நீர் என்றென்றைக்கும் பிரசன்னமானவராய் இருக்கிறீர்.  182. “நாங்கள் யாரிடத்தில் போவோம், கர்த்தாவே, நாங்கள் யாரிடத்தில் போவோம்?” நீர் இந்தக் காரியங்களை செய்கிறதை நாங்கள் காண்கிறோம். தேவன் அவரோடு இருந்தாலொழிய எந்த மனிதனாலும் இந்தக் காரியங்களைச் செய்ய முடியாது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்" என்று அப்போஸ்தலன் கூறினதில் வியப்பொன்றுமில்லை.  183. நிக்கொதேமு அதையே அறிவித்தான், “ரபீ, நீர் தேவனிடத்தி லிருந்து வந்த போதகர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் அதை அறிந்திருக்கிறோம். பரிசேயர்களாகிய நாங்கள், சபை அங்கத்தினர் களாகிய நாங்கள், அதை அறிந்திருக்கிறோம். நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் சபைக்கு வெளியே தள்ளப்படுவோம். ஆனால் நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனென்றால் தேவன் உம்மோடு இருந்தாலொழிய எந்த மனிதனாலும் நீர் செய்கின்ற கிரியைகளை செய்ய முடியாது'' என்றான். 184. உண்மையாகவே, கர்த்தாவே, இன்றைக்கும் அந்த வண்ணமாகவே இருக்கிறது. நீர் அதே அஸ்திபாரமாய், அதே வழியாய், அதே சத்தியமாய், அதே ஒளியுமாயிருக்கிறீர். அதே அஸ்திபாரமா யிருக்கிறீர். நீர் அதே சந்தோஷமாயிருக்கிறீர். நீர் அதே மறுரூபமா யிருக்கிறீர். நீர் எல்லாவற்றிலும் மாறாதவராகவே இருக்கிறீர். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர். இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருக்கிற அதே ஒருவராகவே இருக்கிறீர். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர். அதே சுகமளிப்பவராயும், அதே இரட்சகராகவும் இருக்கிறீர். 185. தேவனே, இங்கே பாவிகள் இருக்கலாம். உம்மைக் காண விரும்புகிறவர்கள் யார் என்று நான் கேட்டபோது இருபது அல்லது முப்பது கரங்கள் மேலே உயர்த்தப்பட்டன. சற்று முன்பு, "குமாரன் பிரகாசிக்கும் வரை காத்திருங்கள், அப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்” என்ற என்னுடைய கடைசி குறிப்பின் மேல் இன்னும் சிறிது அதிக நேரம் நான் அவர்களை வைக்கிறேன். மூர்க்கவெறி கொண்டவர்களாய் இருக்காதீர்கள். சபையை விட்டு வெளியே ஓடிப்போகாதீர்கள். நீண்ட நேரம் இங்கே உட்காருவதற்கு இது மிகவும் உஷ்ணமாக இருக்கிறது என்று கூறுகிறவர் களாயிருக்காதீர்கள். ஆனால் நாம் சிறிது நேரம் காத்திருப்போமாக. குமாரன் பிரகாசிக்கட்டும். வெளிச்சம் மேலே வரட்டும். இயேசுவானவர் காட்சியில் வந்து அவர் இந்த பூமியின் மேல் இருந்தபோது அவர் செய்ததுபோல செய்யட்டும். அப்பொழுது நாங்கள் எந்த வழியாய் போக வேண்டும் என்பதை நாங்கள் காண்போம். இதை அளியும் பிதாவே, நாங்கள் இதை அவருடைய மகிமைக்காக இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். இது உஷ்ணமாயிருக்கிறது என்று நான் அறிவேன். நமக்கு அதிகப்படியான நேரமில்லை .  186. இந்த விபரங்கள் எல்லாம் உண்மையாய் இருக்கின்றனவென்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? [சபையார், "ஆமென்” என்கின்றனர். - ஆசி.] திரும்புவதற்கு வழியேயில்லை. வேறு வழியே கிடையாது. “நல்லது, நீங்கள் எப்படி நிச்சயமுள்ளவர்களாய் இருக்க முடியும்?” 187. நான் ஸ்தாபனத்தின் காரணமாக சபையை குற்றப்படுத்தி யிருக்கிறேன். "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறது". பேராயர்களின் உபதேசம் முதலானவற்றின் மேல் அது கட்டப்பட்டிருக்கிறது. அந்த அஸ்திபாரத்தை நான் குற்றப்படுத்தி யிருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தெய்வீக சுகமளித்தலை அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விசுவாசிப்பதில்லை. அவர்கள் முழு சுவிசேஷ உபதேசங்களை விசுவாசிப்பதில்லை. அவர்களுடைய ஸ்தாபனமும், பெந்தெகோஸ்தேக் களும் அப்படியே வெகு தூரமாய் போய்க் கொண்டிருக்கின்றனர். அது உண்மை . நசரேயர்கள், யாத்ரீக பரிசுத்தர்கள், அவர்கள் மிதக்க விடப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மனிதனின் உபதேசமாகிய அத்தி இலை மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளத் துவங்கிவிட்டனர். மனிதனோ, "நாம் எங்கே போக முடியும்?" என்று சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான். திரும்பிச் சென்றவர்களான அந்த எழுபது பேரைப்போன்று நீங்கள் இருக்கப் போகிறீர்களா? 188. அல்லது, இன்றிரவு பேதுருவைப் போன்று இருப்பீர்களா? "கர்த்தாவே, நாங்கள் எங்கே போவோம்? வேறு யாரிடத்தில் நாங்கள் போக முடியும்? நீர் நித்திய ஒளியின் வார்த்தையை உடையவராயிருக்கிறீர் என்று நாங்கள் கண்டிருக்கிறோம். நீர் ஒருவர் மட்டுமே அதை - உடையவராயிருக்கிறீர்'' என்று கூறுங்கள். 189. இயேசு ஒருவர் மட்டுமே உன்னுடைய ஆத்துமாவை தம்முடைய கரத்தில் வைத்திருக்கிறவராயிருக்கிறார். உங்களுடைய சபை உங்களுக்கு உதவி செய்ய முடியாது. கிறிஸ்து உங்களுக்கு உதவி செய்கிறார்.  190. மரணத்திற்குப் பிறகு நீங்கள் விசுவாசத்தையோ அல்லது எதையாவது சாதிக்கக்கூடியதை எங்கே நீங்கள் காணவும் ...... கண்டறியவும் முடியும்? மரணத்திற்குப் பிறகு ஒரு சபையானது உங்களுக்கு என்ன செய்ய முடியும்? வைத்தியர்கள் உங்களை கைவிடும்போது, உங்களுக்காக ஒரு சபை என்ன செய்ய முடியும்? புற்று நோயினால் அரித்து அழிக்கப்பட்டு மருத்துவ விஞ்ஞானம் உங்களை கைவிட்டிருக்கும் போது எந்த மனிதனுமே உங்களுக்காக என்ன செய்ய முடியும்? ஒன்றுமேயில்லை .  191. ஆனால் ஒரு அஸ்திபாரம் உண்டு, ஒருவர் இருக்கிறார். ஒரு வழி உண்டு. ஒரு ஒளி உண்டு. ஒரு தேவன் உண்டு. ஒரு சுகமளிப்பவர் உண்டு. ஒரு இரட்சகர் உண்டு. மகிமையடைந்த ஒருவர் உண்டு. அவர் இன்றிரவு நம் மத்தியில் இருக்கிறார். ஏனென்றால் அவர் இருப்பேன் என்று வாக்களித்தார். 192. அவர் "இரண்டுபேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே நான் இருப்பேன்". நான் செய்கிற கிரியைகளை அவர்களும் கூடச் செய்வார்கள். இன்னும் கொஞ்சக்காலத்திலே "உலகமானது " அது வெறுமனே சபை, புறம்பேயிருக்கிறவர்கள், "அவர்கள் இனிமேல் என்னைக் காணமாட்டார்கள். இருந்தாலும் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனென்றால், "நான் ........” இலக்கணப்பள்ளிக்குச் சென்ற எவரொருவருக்கும் "நான்" என்பது ஒரு தனிப்பிரதிப் பெயர் என்று தெரியும். புரிகிறதா? "உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்றார். அவர் என்ன கிரியைகளைச் செய்தார்? பிதா அவருக்குக் காண்பித்ததையே.  193. அந்தக் காரணத்தினால் தான், நான் என்னுடைய கடைசிக் கருத்தில் "காத்திருங்கள்” என்றேன். நான் உங்களுக்கு வீணாக பிரசங்கித்திருக்க வில்லை. அவர் செய்ததாக வேதம் என்ன கூறியுள்ளதோ, அவர் செய்ததை வேத வார்த்தையிலிருந்து நான் எதை உங்களுக்கு குறிப்பிட்டு காட்டியிருக்கிறேனோ ........ நான் கூறுகிறதை இயேசுவானவர் செய்யவில்லை யென்றால், அப்பொழுது நான் உங்களிடத்தில் கூறியுள்ளது தவறாக இருக்கிறது. அப்பொழுது வேதாகமம் தவறாக இருக்கிறது. அப்பொழுது நாம் வெளியே சென்று முகமதிய மார்க்கத்தைக் கண்டறிவோம். நாம் புத்தமதத்தைக் கண்டறிவோம். வேறெதாவது உண்மையாயிருக்கிற மார்க்கத்தைக் கண்டறிவோம்.  194. சகோதரனே, இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லட்டும். நீங்கள் துவங்குவதற்கு முன்பாக ஒரே ஒரு வழியும், ஒரே ஒரு சத்தியமும் தான் உண்டு. ஒரே ஒரு மார்க்கம் தான் இருந்து கொண்டிருக்கிறது. அது அதனுடைய ஸ்தாபகர் மரித்தோரிலிருந்து எழும்பி என்றென்றைக்கு மாய் ஜீவிக்கிறார் என்பதை நிரூபிக்க முடிகிறது. ஆமென். அதுதான் ஜீவிக்கின்ற தேவனுடைய சபையாய் இருக்கிறது. அவர்கள் மெத்தோடிஸ்டுகளாக, பாப்டிஸ்டுகளாக, பிரஸ்பிடேரியனாக, இன்னும் என்னவெல்லாமோ, நசரேயனாக, யாத்ரீக பரிசுத்தர்களாக, பெந்தெகோஸ்துகளாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிறந்து இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதனும், ஒருபோதும் ஒழிந்து போகாத அந்த அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டு, அந்த நித்திய நம்பிக்கையில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறான். இப்பொழுதிலிருந்து ஒரு வாரமாக அவர்கள் உங்களுடைய பெட்டியின் மீது தூசியை எறிந்தாலும் கூட, அது உங்களை இன்னமும், சிறிதேனும் பாதிக்காது. நீங்கள் இந்தப் பழைய கட்டிடத்திலிருந்து புதிய ஒன்றுக்குப் போகிறீர்கள் அவ்வளவுதான். அது உங்களை கடைசி நாளில் எழுப்பும். 195. இயேசு கிறிஸ்துவே திரும்பத்தக்கதாக உள்ள ஒரே ஸ்தலமாக இருக்கிறார். நான் என் முழு இருதயத்தோடும், என் முழு பெலத்தோடும் நான் அவரிடத்திற்கு திரும்புவேன். நாங்கள் பம்பாயில் செய்தது போன்றே நான் ஐந்து லட்சம் பேரை உடையவனாயிருந்தாலும் நான் இருப்பது போன்றே இருப்பேன். இங்கே இந்த சிறிய சபையில் இன்றிரவு நூற்றைம்பது பேர் அல்லது அதைப்போன்று சற்று அதிகம், ஒருக்கால் அநேகம் பேர் இல்லாமல் இருக்கலாம். அதே விதமாக என்னையே அவர்மேல் ஆதாரமாய்க் கொண்டு, இன்றிரவு எந்தவிதத்திலாவது அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்துவார். அது அவர் இங்கேயிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படி செய்யும். 196. ஜெப அட்டைகளா? நீங்கள் ஏதாவது கொடுத்திருக்கிறீர்களா? [யாரோ ஒருவர், "ஆம்" என்கிறார் . - ஆசி.) அது உண்மை . நீங்கள் எத்தனை கொடுக்கிறதாகச் சொன்னீர்கள்? [சுமார் இருபது"] சகோதரன் ரடல், நான் இன்றிரவு உண்மையாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இது மிகவும் உஷ்ணமாயிருக்கிறது. இங்கு உள்ளே ஜனங்கள் நெருக்கப்பட்டு, திணிக்கப்பட்டது போன்று இருக்கின்றனர். ஆனால் இது தான் அது என்று நான் யூகிக்கிறேன். அவர்கள் ......... நான் முதலில் செய்தது போன்றே, நான் என்னுடைய மனைவியை கூட்டிக் கொண்டுவரப் போகவேண்டுமென்றிருந்தேன், நான் கார் ஓட்டிச் செல்கையில் இங்கே எத்தனைபேர் இருந்தார்கள் என்று பார்த்து, அது நிரம்பியிருந்ததைக் கண்டு, அப்படியே நான் பின்னால் வந்தேன். புரிகிறதா? வந்து சுற்றிலுமாய் திரும்பி, பின்னாக வந்தேன்.  197. இப்பொழுது இது உஷ்ணமாயிருக்கிறது. ஆனால், ஒ ........ (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.] ஒரு சிலர், பின்னர் ஒருவேளை இன்னும் சிலர் நமக்கு வரலாம், இன்னும் சிலபேர் , அவர்களுக்காவும் ஜெபிப்போம். 198. இப்பொழுது, கர்த்தர் நமக்காக ஏதாவது முதன்மையானதை செய்வார் என்று நான் சொல்லவில்லை. ஒருக்கால் அவர் செய்வார். ஒருக்கால் அவர் செய்யாமலுமிருப்பார். எனக்குத் தெரியாது.  199. இப்பொழுது என்ன நீ ஒன்றிலிருந்து துவங்கினாயா? [யாரோ ஒருவர், "ஒன்று'' என்கிறார். - ஆசி.) ஒன்று சரி. ஜெப அட்டை எண் ஒன்றை வைத்திருக்கிறது யார்? நீங்கள் உங்களுடைய கரத்தை சற்று உயர்த்துவீர்களா? யாரோ ஒருவர் ஜெப அட்டை எண் ஒன்றோடு இருக்கிறார் (யாரோ ஒருவர் ஏதோ ஒன்றைக் கூறுகிறார்) நீங்களே அதைக் குறித்து நிச்சயமாய் இருக்கிறீர்களா? எண் ஒன்றா? ["தொடர்ந்து செல்லுங்கள், பின்னால் நில்லுங்கள் " ஓ , நான் வருந்துகிறேன். சரி அம்மா. நீங்கள் நேராக இங்கே வாருங்கள். 200. எண் இரண்டு, யாரிடம் எண் இரண்டு உள்ளது? ஜெப அட்டை எண் இரண்டு. உங்களுடைய கரத்தை நீங்கள் மேலே உயர்த்துவீர்களா? சிறிய பெண் ...... ஓ, நான்-நான் வருந்துகிறேன். ஜெப அட்டை எண் இரண்டு, உங்களுடைய காத்தை மேலே நீங்கள் உயர்த்துவீர்களா?. சரி. 201. ஜெப அட்டை எண் இரண்டு இங்கே இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? [யாரோ ஒருவர், "இதோ அது இருக்கிறது" என்கிறார். - ஆசி.) அந்த அம்மாள் சரி, அம்மா இங்கே வாருங்கள், நேராக இங்கே .  202. எண் மூன்று. சீக்கிரமாய் பாருங்கள். இப்பொழுது அது ஒருக்கால் யாராவது செவிடாய் இருக்கலாம் அல்லது யாராவது எழும்ப முடியாதவராக இருக்கலாம். [யாரோ ஒருவர், "இதோ அது உள்ளது'' என்கிறார். - ஆசி.) எண் மூன்று தயவு செய்து உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ஜெப அட்டை எண் மூன்று. சரி, ஐயா, இந்த மனிதனை எனக்குத் தெரியும். சரி. 203. எண் நான்கு. உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ஜெப அட்டை எண் நான்கு. தயவு செய்து யாரிடமோ எண் நான்கு இருக்கிறது. இங்கே உள்ள இந்த அம்மாள், அந்த அம்மாளை எனக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். நான் தவறாக இல்லை, நான் சரியாக கூறுகிறேன் என்று நான் நினைக்கிறேன், எண் நான்கு. எண் ஐந்து. பின்னாக பின்னிருப்பவர்கள். சரி. எண் ஆறு. ஜெப ஆட்டை எண் ஆறு. சரி. எண் ஏழு. ஜெப அட்டை ஏழு. அந்த பெருந்தன்மையாளர் வருகிறார். எண் எட்டு. 204. பில்லி, நீ அங்கே போய் அதை ஒழுங்குபடுத்து, அதனால் உனக்கு நிற்பதற்கு அல்லது வேறு எதற்காவது இடம் இருக்கும். எண் ஒன்பது. யாரிடம் ஜெப அட்டை எண் ஒன்பது உள்ளது? 205. இங்கே இருக்கிற இந்த அம்மாளா? சரி. (அந்த சகோதரி, "எண் எட்டு” என்கிறாள் - ஆசி.) எண் எட்டு சரி.  206. எண் ஒன்பது. ஜெப அட்டை . எண் ஒன்பது யாரிடம் உள்ளது? சுற்றிப்பாருங்கள். யாராவது செவிடாய் இருக்கலாம். எண் ஒன்பது, எண் ஒன்பது. அவர்கள் வெளியே நடந்து போனார்களா? நீங்களே சுற்றிப் பாருங்கள் ........ யாராவது அவர்களுடைய கரத்திலே ஒரு ஜெப அட்டையை வைத்திருந்தால் சுற்றிப் பாருங்கள். ஒருவேளை யாரோ எழும்ப முடியாதவர்களாக இருக்கலாம். ஜெப அட்டை எண் ஒன்பது. நாங்கள் யாரையும் தவற விட விரும்பவில்லை . 207. இங்கே இருக்கின்ற இந்த அம்மாள் ஒன்பதாவது எண்ணை வைத்திருக்கிறார்களா? [யாரோ ஒருவர், "இல்லை ஐயா, பதினான்கு" என்கிறார். - ஆசி.] பாருங்கள்.  208. [யாரோ ஒருவர், “இருபத்தாறு, இருபத்தாறு” என்கிறார். - ஆசி.) இல்லை இல்லை. அது அப்பால் உள்ளது. 209. எண் ஒன்பது. உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்களுடைய எண் அழைக்கப்பட்டாலொழிய நீங்கள் வெறுமனே வரவேண்டாம். எண் ஒன்பது. 210. இந்த அம்மாளை எனக்குத் தெரியும். திருமதி போர்ட், உங்களிடம் ஜெப அட்டை எண் ஒன்பது உள்ளதா? யாராவது பாருங்கள். ஒருவேளை அவளால் கேட்கமுடியாமல் இருக்கலாம். ஜீன், ஒரு நிமிடம் நீங்கள் அங்கு போய் அதைக் குறித்துப் பார்க்கமுடியுமா? சகோதரன் ஃப்ரட் இங்கே வந்து, பில்லிக்கு ஒரு நிமிடம் உதவி செய்யுங்கள். சரி. 211. எண் பத்து. எண் பத்தை வைத்திருக்கிறது யார்? எண் ஒன்பது, எண் பத்தா ? 212. எல்லோரும் எங்கேயிருக்கிறீர்கள்? சரி அப்படியானால் நாம் இவைகளோடு துவங்குவோம், இவைகளை கொண்டு வாருங்கள். சரி. 213. இப்பொழுது ஜெப வரிசையில் இருக்கின்ற உங்களில் எத்தனை பேருக்கு என்னைத் தெரியும்? உங்களுக்கு என்னைத் தெரியும். அவருக்கு என்னைத் தெரியும். சரி. 214. அங்கே கூட்டத்தாரில் என்னைத் தெரியாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? நான் ....... உங்களுக்கு என்ன கோளாறு என்று எனக்குத் தெரியாது என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் நீங்கள் சுகவீனமாயிருக்கிறீர்களா? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. சரி. 215. இப்பொழுது நீங்கள் என்னை அறியாமலிருக்கிறீர்கள். நான் உங்களை அறியேன். நீங்கள் இதைச் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நாம் இந்த சிறிய ஜெப வரிசையில் இருக்கையிலே நீங்கள் இந்தப் பக்கமாய் பார்த்து அந்த ஸ்திரீ செய்த வண்ணமாய் செய்ய நான் விரும்புகிறேன். 216. இப்பொழுது பாருங்கள். ஜனங்களோ சுகவீனமாய் இருக்கிறார்கள். நான் முடமானவர்கள் எவரையுமே காணவில்லை. ஆனால் - ஆனால் இந்த ஜனங்கள் சுகவீனமாய் இருக்கிறார்கள். இப்பொழுது அவர்களுக்கு சுகம் தேவையாயிருந்தால் நல்லது, அவர்களுக்கு சுகமளிக்கக்கூடிய ஒரே ஒரு நபர்தான் இருக்கிறார், அது இயேசு கிறிஸ்து என்ற ஒரு மனிதர். இப்பொழுது அவர் எப்படி அதைச் செய்திருக்க முடியும்? அவர் அதை எப்படிச் செய்கிறார்? அவர் அதை செய்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிற காரணத்தால், அவர் அதை உடையவராக இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இப்பொழுது அவர் ஜீவிக்கிறார் என்றால் அப்பொழுது அவர் இன்னமும் சுகமளிக்கிறவராயும் இருக்கிறார். அது சரியா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அவர் இன்னமும் ஜீவிக்கிறார் என்றால், அவர் இன்னமும் சுகமளிக்கிறவராக இருக்கிறார். சரி, ஆகையால் இன்றிரவு அவர் இங்கே ஜீவிக்கிறார் என்று உங்களுக்கு அவர் நிரூபிக்க முடிந்தால், அவர்தாமே நிரூபிக்க முடிந்தால் நலமாயிருக்கும். 217. இப்பொழுது ஒரு சரீர உருவத்தில் இங்கே இருக்க முடியாது. ஏனென்றால், அவருடைய சரீரம் தேவனுடைய வலது பாரிசத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. எத்தனை பேருக்கு அது தெரியும்? அவருக்குள்ளிருந்த பரிசுத்த ஆவி இப்பொழுது இங்கே திரும்பி வந்து அவருக்குள் அது இருந்தபோது செய்ததான அதே கிரியைகளை அவர் கூறினதைச் செய்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். சரி. இப்பொழுது அவர் செய்த அதே கிரியைகளை அவர் நம்மில் செய்வாரானால் நலமாயிருக்கும். 218. இப்பொழுது, ஜெப அட்டைகள் இல்லாதவர்களாகிய நீங்களும், என்னை அறியாதவர்களும், உங்களுடைய கரத்தை உயர்த்தினவர்களும் நீங்கள் இந்தப் பக்கமாக நோக்கிப் பார்த்து, "கர்த்தாவே, நீர் இங்கே உள்ளே இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன், நான் உம்முடைய வஸ்திரத்தை தொட விரும்புகிறேன். ஏனென்றால் இப்பொழுது நீர் என்னுடைய பெலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய ஒரு பிரதான ஆசாரியராய் இருக்கிறீர் என்று வேதம் கூறியுள்ளது. நான் சுகவீனமாயிருக்கிறேன். எனக்கு ஜெபம் தேவை. நான் உம்முடைய வஸ்திரத்தை தொட விரும்புகிறேன். ஆகையால் நீர் சகோதரன் பிரான்ஹாமின் மூலமாகப் பேசி என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லும்" என்று கூறுங்கள். அப்படியே - அப்படியே அதைச் செய்யுங்கள். அவர் இங்கே இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை கண்டறிவீர்கள். 219. ஜெப வரிசையில் முதலாவது இருக்கிறது யார்? சரி. இங்கே நாற்காலியில் இருக்கும் இந்த அம்மாளா? சரி. சரி. 220. முதலாவது காரியம் நான் - நான் உங்களை நான் அறியேன் என்று நான் - நான் நினைக்கிறேன். நான் சிந்திக்கவில்லை. நாம் ஒருவருக் கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். [அந்த சகோதரி, "ஆம் நாம் அன்னியர்கள்" என்கிறாள். - ஆசி.) நாம் அந்நியர்கள். சரி. இப்பொழுது எனக்குத் தெரியாத ஒரு ஸ்திரீ இங்கே இருக்கிறாள். ["இயேசுவே உமக்கு நன்றி ." அவளைக் குறித்து நான் ஒன்றுமே அறியேன். என்னுடைய ஜீவியத்தில் அவளை நான் கண்டதேயில்லை. ["உண்மை . இயேசுவே உமக்கு நன்றி. அவள் எனக்கு ஓர் அந்நியளாய் இருக்கிறாள். 221. அப்படியே வேதாகமத்தில் அது இருந்தது போன்றதான ஒரு காட்சியைப் போல நாம் இங்கே இருக்கிறோம். நீங்கள் அதை வாசிக்க விரும்பினால், பரிசுத்த யோவான் 4-ஐப் போன்று இங்கே ஒரு மனிதனும், ஒரு ஸ்திரீயும் சந்திக்கிறார்கள். இயேசு அந்த ஸ்திரீயை கிணற்றண்டை யிலே சந்தித்தார். [அந்த சகோதரி, "இயேசு, உமக்கு நன்றி" என்கிறாள். - ஆசி.) அவர் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை, அதற்கு முன்பு அவளும் அவரைக் கண்டதில்லை.  222. எனவே அவர், ''ஸ்திரீயே தாகத்துக்குத்தா" என்றார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ? அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொள்ளுதல். 223. அவள், "சமாரியரிடத்தில் இப்படியாய் கேட்பது யூதருக்கு வழக்க மில்லையே. எங்களுக்கு ஏதும் சம்மந்தம் கிடையாது'' என்றாள். அவர், "போய், உன் புருஷனை அழைத்துக் கொண்டு இங்கே வா” என்றார். அவள், “எனக்கு புருஷன் இல்லையே” என்றாள்.  224. "அது உண்மை . உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தனர். நீ ஜீவித்துக் கொண்டிருக்கின்ற அந்த ஒருவனும் உன்னுடையவன் அல்ல” என்றார்.  225. அதற்கு அவள், "ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். இப்பொழுது சமாரியர்களாகிய நாங்கள் அறிவோம். மேசியா வரும்பொழுது இந்தக் காரியங்களையெல்லாம் அவர் எங்களுக்கு அறிவிப்பார் என்று நாங்கள் அறிவோம். ஆனால் நீர் யார்?” என்றாள். அதற்கு அவர், "உன்னுடனே பேசுகின்ற நானே அவர்'' என்றார்.  226. அவள் ஓடிப்போய், பட்டணம் முழுவதும் கூறினாள். “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அல்லது அவளைக் குறித்த ஏதோ காரியம். அவரை வந்து பாருங்கள்; ''அவர் மேசியாதானோ” என்றாள். (அந்த சகோதரி, “இயேசுவே உமக்கு நன்றி” என்றாள். - ஆசி]  227. நல்லது, அது அந்தநாளின் மேசியாவின் அடையாளமாக இருந்தால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அப்போது அது இருந்தது போலவே, இன்றைக்கும் அது அதே விதமாக இருக்காதா? [சபையார், "ஆமென்” என்கின்றனர். - ஆசி] அவர் அதே காரியத்தைச் செய்ய மாட்டாரா? ["ஆமென்.''  228. அவர் அதேவிதமாக அதைச் செய்வாரானால் பாவியாகவோ அல்லது பாவியாய் இல்லாமலோ இந்தக் கட்டிடத்திலுள்ளவர்களில் எத்தனை பேர் அதை விசுவாசிப்பீர்கள்? உங்களுடைய கரத்தை நான் காணட்டும்.  229. இப்பொழுது இங்கே என் கரம் இருக்கிறது. நான் அறிந்தமட்டில் என்னுடைய ஜீவிய நாட்களில் அந்த ஸ்திரீயை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. [அந்த சகோதரி, “ இயேசுவே உமக்கு நன்றி” என்கிறாள். - ஆசி.] அவள் இங்கே நின்றுகொண்டு, "இயேசுவே உமக்கு நன்றி" என்று கூறிக்கொண்டிருக்கிறாள், அவள் ஒரு கிறிஸ்தவளாக இருக்கலாம். அவள் ஒரு கிறிஸ்தவளாக இல்லாமலும் இருக்கலாம்.  230. அவரைக் குறித்து ஒன்றுமே அறியாமல், “இயேசுவே, உமக்கு நன்றி'' என்று கூறுகிற அநேக ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்கள் அநேகராயிருக்கின்றனர். புரிகின்றதா? அவர், "அநேகர் அந்நாளில் என்னிடத்தில் வந்து, "கர்த்தாவே, கர்த்தாவே" என்பார்கள். நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என்பேன் " என்று அவர் கூறினார். 231. இப்பொழுது, இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரானால், இங்கே நமது மத்தியில் அவர் இருப்பாரானால், அவருக்கு முன்பாக நான் என்னை தாழ்த்த முடிந்தால், அவரிடத்தில் என்னை ஒப்புக்கொடுக்க முடிந்தால், அப்பொழுது அப்படியே அவர் செய்தது போன்றே என் மூலமாக அவர் கிரியை செய்வார். கிணற்றண்டையில் சமாரிய ஸ்திரீயினிடத்தில் இயேசு மூலமாய் அவர் செய்தது போன்று என் மூலமாய் தேவன் கிரியை செய்வாரோ? அது சரியா? [சபையார், "ஆமென்'' என்கிறார்கள். - ஆசி.] இப்பொழுது இங்கே நாம் இருக்கிறோம். நாம் இருவரும் ஒருவரை யொருவர் ஒருபோதும் பார்த்ததேயில்லை. இது உங்கள் எல்லாரையும் விசுவாசிக்கும்படி செய்யுமா? ["ஆமென்.''] இது உங்களுடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துமா? "ஆமென்."] எனவே அவர் இங்கே இருக்கிறாரென்றால், அவர் ஜீவிக்கிறாரென்றால். அப்பொழுது அவர் இன்னமும் உங்களுடைய இரட்சகராகவும், இன்னமும் உங்களுடைய சுகமளிப்பவராகவும் இருக்கிறார். அது சரியா? ["ஆமென்." இப்பொழுது பாருங்கள் அவர் செய்வாரானால் நலமாயிருக்கும். 232. இப்பொழுது, தேவனே இது இப்பொழுது உம்முடைய கரங்களில் இருக்கிறது. எஞ்சியுள்ளது உமக்குச் சொந்தமானது. ஏனென்றால் மனிதனால் இந்தக் காரியங்களை செய்ய முடியாது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அது உம்மிடத்திலிருந்து வரவேண்டியதாய் இருக்கிறது. தயவுசெய்து பிதாவே இன்றிரவு இங்கே உட்கார்ந்திருக்கிற ஜனங்களின் நன்மைக்காகவும், சுவிசேஷத்தின் மகிமைக்காகவும், இன்றிரவு, பிதாவே நீர் இன்னமும், நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுகிறிஸ்துவாகவே இருக்கிறீர் என்று ஜனங்கள் அறிந்து கொள்ளும்படியாய் அது செய்யப்படுவதாக. 233. அறியாமலும், யூகித்துக் கொண்டும், ஆச்சரியப்பட்டுக் கொண்டும் இருக்கின்ற அவர்களுடைய சில இருதயங்களில் இருளானது ஒருக்கால் இருக்கலாம். நீர் மட்டும் வந்து, ஒளியை பிரகாசிக்கச் செய்தால், அவர்கள் அந்த வழியைக் கண்டு பின்னர் உமக்குள்ளாக செல்வார்களாக. அவர்கள் சுகவீனமாய் இருக்கிறார்கள். அவர்கள் சுகமாக்கப் படுவார்களாக. அவர்கள் இழக்கப்பட்டவர்களாய் இருந்தால், அவர்கள் இரட்சிக்கப்படுவார்களாக. குமாரன் எழும்பும் போது கரைக்குத் திரும்பிப் போகும் வழியை நாங்கள் காண்போம். இதை அளியும் கர்த்தாவே. "நீதியின் சூரியன், அவருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தோடே உதித்து, அவருடைய மகத்துவத்தை இந்த ஸ்தலத்தின் மேல் பரப்புவாராக. இதை அளியும் பிதாவே. தேவனின் மகிமைக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம், ஆமென். 234. நீங்கள் பயபக்தியாய் இருக்க நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது சபையில் விளையாடிக் கொண்டிருப்பதல்ல என்பதை ........ நாம் விளையாட முடியாது என்பதை நாம் உணருகிறோம். இது சர்வ வல்லமையுள்ள தேவனின் சமூகத்தை இந்த சிறிய கட்டிடத்திற்குள் அழைக்கிறதாக இருக்கிறது. 235. இப்பொழுது நான் எங்கே நிற்கிறேன் என்று நீங்கள் பார்க்கிறீர்களா? இங்கே நூற்று ஐம்பது பேர் இருக்கிறார்கள். நான் ஒரு நேரத்தில் பத்தாயிரக்கணக்கானோர் , லட்சக்கணக்கானோர், ஐந்து லட்சம், மற்றும் எத்தனை பேர் இருந்தார்களோ அவர்கள் முன்பாக, அவர்கள் அங்கே நாத்திகர்களோடும், அவிசுவாசிகளோடும், நம்பிக்கை யற்றவர்களோடும், பாம்பை - கையாளுபவர்களோடும், மற்றெல்லாரோடும் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, இதை கூறியிருக்கிறேன். அவர் தவறிப் போக மாட்டார். 236. இப்பொழுது அவர் வேதாகமத்தின் தேவனாயிருக்கிறார் என்று அவர் நிரூபிக்க வேண்டியவராயிருக்கிறார், இல்லையென்றால் அவர் வேதாகமத்தின் தேவனல்ல. அவர் வேதாகமத்தின் தேவனாயிருந்தால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருந்தால், இந்த ஸ்திரீ இங்கே எதற்காக இருக்கிறாள் என்பதை அவர் கூறமுடிந்தால் நலமாயிருக்கும். நான் அவளைக் கண்டதேயில்லை. அதாவது அவளுக்கு ஏதாவது சொல்ல, எனக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாததை அவள் அறிவாள். கிணற்றண்டையிலே சமாரிய ஸ்திரீக்கு அவர் செய்தது போன்று அவள் என்னத்திற்காக இங்கே இருக்கிறாள் என்று அவளுக்கு அவர் சொல்ல முடிந்தால், அவள் அறிந்திருந்த ஏதோ காரியத்தை அவளிடத்தில் அவரால் விளக்கிக் கூற முடிந்தால், நான் அவளை அறிந்திருக்கவும் கூட இல்லாதபடியால், அவளுக்கும் என்னைத் தெரியாது. எனவே ஜீவியத்தில் முதல் முறையாக நாங்கள் இருவரும் இங்கே நின்று கொண்டிருக்கிறோம். நிச்சயமாக அது உங்களிடத்திலிருந்து எல்லா தெளிவின்மையையும் போக்குமளவிற்கு அவ்வளவு கடினமாய் உங்களை குலுக்கும். அவர் அதை அளிப்பாராக என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. 237. இப்பொழுது ஜெபிக்கப்படுவதற்காக இங்கே இந்த அம்மாள் இருக்கிறாள், நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது விசுவாசிக்க நான் விரும்புகிறேன். இப்பொழுது இந்த ஸ்திரீயை அறியாதவனாய், கிணற்றண்டையிலே அந்த ஸ்திரீக்கு நம்முடைய கர்த்தர் செய்தது போன்று சரியாய் ஒழுங்காக அவளுடைய ஆவியோடு தொடர்பு கொள்வதற்காக நான் இவளிடத்தில் அப்படியே ஒரு வினாடி பேச விரும்புகிறேன்.  238. இப்பொழுது நாங்கள் அநேகமாக ........ நாங்கள் இதற்கு முன்பாக சந்தித்ததேயில்லை. ஆனால் இருந்தபோதிலும், கர்த்தர் உன்னை அறிந்திருக்கிறார். அவர் என்னை அறிந்திருக்கிறார். நீ இங்கே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றும், நீ அறிந்திருக்கிற ஏதோ காரியத்தைப்பற்றி என்னை கேட்கும்படி அவர் என்னிடம் கூறமுடிந்தால் நலமாயிருக்கும். நான் உன்னைக் குறித்து ஒன்றுமே அறியேன். 239. இப்பொழுது, ஒருவேளை உமக்கு விளக்கிக் கூறுவதற்காக என்னை இங்கே கொண்டு வந்து, உன்னையும் இங்கே அவர் அனுப்பி யிருந்தால் அல்லது அவர் என் மூலமாய் பேசி, நீ இந்த மேடைக்கு எதற்காக வந்தாய்? என்று என்னிடம் கூற முடிந்தால் அது நீ அவரை விசுவாசிக்கும்படி செய்யுமா? [அந்த சகோதரி, ''ஆம், அது விசுவாசிக்கும்படி செய்யும்" என்கிறாள். - ஆசி.) அது உன்னை விசுவாசிக்கச் செய்யுமா? இப்பொழுது நான் காண்கிறேன். 240. கூட்டத்தார், அவர்கள் விசுவாசிப்பதாக கூறினர். தேவன் இன்னமும் தேவனாயிருந்தால் ஏதோ காரியம் சம்பவிப்பதற்காக இப்பொழுது இங்கே நாம் ஆயத்தமாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து செய்த அதே காரியமே! 241. என்னால் இப்பொழுது அந்த ஸ்திரீயை காணமுடிகின்றது. அவள் தன்னுடைய கண்களுக்காக நான் ஜெபிக்க வேண்டுமென விரும்புகிறாள். அவளுடைய கண்களில் அவளுக்கு ஏதோ கோளாறு இருக்கிறது. இப்பொழுது அது (அந்த சகோதரி, "இயேசுவே உமக்கு நன்றி. இயேசுவே உமக்கு நன்றி" என்கிறாள். - ஆசி.) அது ஒன்றும் ஒரு யூகமல்ல. அது உண்மை . ["இயேசுவே உமக்கு நன்றி. இயேசுவே உமக்கு நன்றி.” அவளுடைய கண்பார்வை அவளுக்கு குறைந்து கொண்டேயிருக்கிறது. அவளுடைய கண்களுக்காக ஜெபிக்க வேண்டுமென அவள் விரும்புகிறாள். அது உண்மை . அதாவது ........ அது சரியென்றால், சகோதரியே அந்த கைக்குட்டையை அவர்களுக்கு அசைத்துக் காட்டு, ["கர்த்தாவே உம்முடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்".]  242. இப்பொழுது என்னுடைய ஜீவியத்தில் இதற்கு முன்பு நான் அவளைக் கண்டதேயில்லை. அது என்ன செய்தது? அது என்ன செய்தது? [அந்த சகோதரி, "கர்த்தாவே உமக்கு நன்றி. இயேசுவே உமக்கு நன்றி” என்கிறாள். - ஆசி.) அவள் ஒரு அருமையான நபர் போன்று தென்படுகிறாள். நான் யூகித்ததாக நீ நினைக்கிறாயா? சரி, நாம் பார்ப்போம். (கர்த்தாவே, இயேசுவே, இன்றிரவு நாங்கள் உம்முடைய நாமத்தை ஸ்தோத்தரிக்கிறோம்”. - ஆசி.] இப்பொழுது அம்மாளே ......  243. இது முதற்கொண்டு எல்லா சந்தேகமும் இந்த சபையை விட்டு எடுத்துப் போடப்பட்டு, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று சகோதரன் ரடல் (Ruddell) பிரசங்கிக்கை யில், இயேசுகிறிஸ்து அவருடைய மகிமையில் வெளிப்பட்டு அது அவ்வண்ணமாகவே இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டது என்று இந்த பிரசங்க பீடத்தின் மூலமாக அறியப்படுவதாக. [அந்த சகோதரி, "ஆம், கர்த்தாவே, இயேசுவே உமக்கு நன்றி" என்கிறார். - ஆசி.] 244. இப்பொழுது, ஆம், நான் அவளைக் காண்கிறேன் .......... அவளுடைய கண்கள் மோசமாகிக் கொண்டே போகிறது. அது அவளுடைய கண்களில் சூட்டுத்தழும்பு போன்ற ஒன்று இருக்கிறது. [அந்த சகோதரி, "இயேசுவே உமக்கு நன்றி” என்கிறாள். - ஆசி] அடுத்து இன்னொரு காரியம் அவளிடத்தில் வேறு ஏதோ கோளாறு இருக்கிறது. ["இயேசுவே உமக்கு நன்றி"] அவளுக்கு ஒரு ........ அவளுக்கு ஏதோ விதமான அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. ["ஓ, கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி. ஓ!”) அது ஒரு பெரிய தழும்பு தசையை உண்டாக்கியிருக்கிறது. அவள் இந்த பட்டணத்தி லிருந்து வரவில்லை. ["கர்த்தாவே உமக்கு நன்றி." அவள் இந்த நாட்டிலிருந்தும் வரவில்லை . ["ஓ!"] அவள் கென்டக்கி (Kentucky) யில் இருந்து வருகிறாள். அது உண்மை . அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறாள். ["இயேசுவே உமக்கு நன்றி. அல்லேலூயா! அல்லேலூயா!"] ஒரு சிறிய பெண், சுமார் எட்டு அல்லது பத்து வயதாய் இருக்கலாம். ["ஓ!”] அந்த மகளுக்காக அவளுக்கு ஜெபம் தேவையாயிருக்கிறது, ஏனென்றால் அந்த மகள் ஒரு அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியிருக்கிறாள். [தேவனே உமக்கு நன்றி. இயேசுவே உமக்கு நன்றி.” அது கர்த்தர் உரைக்கிறதாக இருக்கிறது. 245. அது உண்மைதானா? அல்லது இல்லையா? என்று பாருங்கள். அம்மாளே அது உண்மையாய் இருந்ததா? அது உண்மைதான் என்றால் மீண்டுமாய் அந்த கைக்குட்டையை ஜனங்களுக்கு அசைத்துக் காட்டு. [அந்த சகோதரி, "இயேசுவே உமக்கு நன்றி, அவள் ஆறு வயது மட்டுமே ஆனவள்” என்கிறார். - ஆசி.] இது ஒரு சிறிய பெண்ணாய் இருக்கிறது சரி. 246. உன்னுடைய பெயர் என்னவென்று தேவனால் என்னிடத்தில் கூற முடியும் என்று நீ நம்புகிறாயா? [அந்த சகோதரி, "ஆம், கர்த்தாவே, ஆம், தேவனே'' என்கிறாள். - ஆசி.] தேவனால் ........ இங்கே நான் ஏதோ காரியத்தை உனக்கு காட்டுவேன். இதோ ஒரு மனிதன் வருகிறார். உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். அது உன்னுடைய கணவன். [இயேசுவே உமக்கு நன்றி. இயேசுவே உமக்கு நன்றி” அவர் இங்கே பின்னாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அது உண்மை . [“இயேசுவே உமக்கு நன்றி. இயேசுவே உமக்கு நன்றி.") அவருக்கும் கூட சுகம் தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்குக் கீல்வாதம் (Rheumatism) இருக்கிறது. அது உண்மை . ["இயேசுவே உமக்கு நன்றி."] உன்னுடைய பெயர் கேம்ப்பர். அது உண்மை . [“இயேசுவே உமக்கு நன்றி.” அது உண்மை . நீங்கள் கென்டக்கிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் கென்டக்கிக்கு திரும்பிப் போய் பெற்றுக்கொள் ........ அந்த கைக்குட்டையை கொண்டு போய் அந்தப் பிள்ளையின் மேல் அதை வையுங்கள். [அந்த சகோதரி, "ஓ!" என்று கதறுகிறாள்] உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். அறுவை சிகிச்சை வேண்டாம். ஆமென். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? 247. அது ஏறக்குறைய அந்த ஸ்திரீயினுடைய ஜீவியத்தின் கலைக்களஞ்சியமாய் இருக்கிறது. நான் என்னுடைய கரங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய ஜீவியத்தில் அவளைக் கண்டதேயில்லை . சரி. 248. இப்பொழுது பாருங்கள், அவர் எதைத் தொட்டார்? அவர் என்ன செய்தார்? அவர் அந்த பிரதான ஆசாரியரைத் தொட்டார். நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய அந்த ஒருவரை அவர் தொட்டார். ஆமென்.  249. இப்பொழுது, சுகமளித்தல் தேவனுடைய சொந்த சாட்சியாய், அவருடைய சொந்த மகிமையாய் இருக்கிறது. சரி.  250. உம்மை , நீர் எனக்கு அந்நியராயிருக்கிறீர் என்று நான் நினைக்கிறேன். உம்மை எனக்குத் தெரியும் என்று நான் நினைக்க வில்லை. தேவன் உம்மை அறிந்திருக்கிறார். உம்முடைய கோளாறு என்ன என்று அல்லது உமக்கு என்ன தேவை என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், அது சுகவீனமா, வீட்டுக்காரியமா அல்லது அது எதுவாயிருந்தாலும், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அம்மாளே நீங்கள் விசுவாசிப்பீர்களா? [அந்த சகோதரி, "ஓ, விசுவாசிப்பேன்'' என்கிறாள். - ஆசி.) இப்பொழுது நான் அறியாத இன்னொரு அம்மாள் இங்கே இதோ இருக்கிறாள். அவளுக்கு என்னைத் தெரியாது. நாங்கள் ஒருவருக்கொருவர் முழுவதுமாய் அந்நியர்களா யிருக்கிறோம். இதுவே ஜீவியத்தில் எங்களுடைய முதல் முறையான சந்திப்பாயிருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரக்கூடுமானால், பிரசன்னமானது இப்பொழுது இங்கே உள்ளே வந்தால், இந்த ஸ்திரீயைக் குறித்து ஏதாவது காரியத்தை நமக்கு கூறினால் நலமாயிருக்குமே! 251. இப்பொழுது அவளை சுகப்படுத்துவது என்பது நான் அதைச் செய்ய முடியாது. அவர் கல்வாரியில் மரித்தபொழுது தேவன் அதைச் செய்தார். அவள் ஒரு பாவியாய் இருந்தால், நான் அவளை இரட்சிக்க முடியாது. ஏனென்றால் இயேசுவானவர் அதைச் செய்தார் ......... அது ஏற்கனவே முடிக்கப்பட்டதாய் இருக்கிறது. ஆனால் நம்மால் அதை விசுவாசிக்க முடிந்தால், அவர் இன்னமும் ஜீவிக்கிறார் என்றும், அவருடைய கிரியைகள் இன்னமும் உண்மையாயிருக்கிறதென்று காண்பிக்க, அதை நமக்கு தத்ரூபமாக்க அவர் இருக்கிறதான சமூகத்திற்குள் அவரால் வரமுடியும்.  252. (ஒரு சகோதரன் சத்தமாய் கதறுகிறார் மற்றும் சபையார் மிகவும் களிகூருகின்றனர். - ஆசி.) 253. "உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால் எல்லாம் கைகூடும்." இப்பொழுது உங்களால் மட்டும் விசுவாசிக்கக் கூடுமானால், தேவனில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். இப்பொழுது யாரோ ஒருவர் நல்லவிதமாகவே உணருகிறார். அதெல்லாம் சரிதான். 254. அன்றொருநாள் நான் கென்டக்கி நாட்டின் வழியாக போய்க் கொண்டிருந்தேன். ஒரு மனிதன் புதர்களின் ஊடாக அலறிக் கொண்டு மேலே வருகிறதைக் கேட்டேன். நான், 'அந்த மனிதனுக்கு ....... அவனுக்கு என்ன நேர்ந்தது?" என்றேன். ''அவன் குடித்துவிட்டு இசைவான உணர்ச்சியை வெளிப்படுத்துகிறான்” என்று கூறப்பட்டது. 255. இந்த மனிதன் அவ்வண்ணமே உள்ளான், ஆனால் அவனோ மதுவைக் குடித்திருந்தான். வெறுமனே குடித்து இசைவான உணர்ச்சியை வெளிக்காட்டிக் கொண்டிருந்தான். அது உண்மை. "நீங்கள் மதுபான வெறி கொண்டிராமல், ஆவியினால் நிறைந்திருங்கள்'' என்று வேதம் கூறியிருக்கிறது. 256. இப்பொழுது இங்கே உள்ள இந்த ஸ்திரீ ஒரு அந்நியளாய் இருக்கிறான், அவளுடைய கோளாறு என்ன என்றும் அல்லது அவளைக் குறித்து எந்தக் காரியமுமே எனக்குத் தெரியாது என்றும் அவள் அறிந்தி ருக்கிறாள். தேவன் அதை அவளுக்கு கூறுவாரானால் அவளே சாட்சி யாயிருந்து அது உண்மைதானா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்வாள். அம்மாளே அது சரிதானா? தேவன் அதைச் செய்தால் அது உங்களுக்கு உதவியாய் இருக்குமா? இப்பொழுது உம்மை சுகப்படுத்துவது சகோதரியே, நான் அதைச் செய்யக்கூடுமானால் நான் அதைச் செய்வேன், ஆனால் என்னால் முடியாது. நான் வெறுமனே ஒரு மனிதன்.  257. ஆனால் அந்த அம்மாள் ஜெபித்துக் கொள்ளும்படியாய் இங்கே இருக்கிறாள். அவளுக்குப் பித்தப்பையில் கல் உள்ளது. அது உண்மை . அவளுக்கு நீரழிவு நோயும் கூட இருக்கிறது. அதனால் தான் நீ ஜெபிக்க வேண்டுமென்றிருக்கிறாய், இல்லையா அம்மாளே? அது உண்மையென்றால், ஜனங்கள் காணும்படி உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நீர் யாரென்று தேவனால் எனக்குச் சொல்லக்கூடும் என்று நீ விசுவாசிக்கிறாயா? அது உனக்கு உதவி செய்யுமா? அது உதவி செய்யுமா? அப்படியானால் திருமதி. ஜான்சன் திரும்பிப் போய் உங்கள் இருக்கையில் அமருங்கள், நீங்கள் அதை விசுவாசித்தால் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே சுகமடைவீர்கள்.  258. உங்களால் விசுவாசிக்க முடியவில்லையென்றால், என்ன கோளாறு என்று எனக்குத் தெரியாது. ஏதோ ஒன்று தவறாய் உள்ளது. உங்களுக்கு அது புரியவில்லையா? குமாரனின் ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதே காரியத்தைத்தான் இயேசுகிறிஸ்து செய்தார்.  259. எனக்கு இந்த மனிதனை தெரியும். நான் ....... அவருடைய மாமியார் இங்கே இருக்கிறார். அவருடைய மனைவியை எனக்குத் தெரியும். நீண்டகாலமாக நான் அவரைப் பார்க்கவில்லை. இவருடைய பெயர் ஜேம்ஸ் மோரீஸ். (James Morris) ஆனால் அவர் இங்கே எதற்காக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவருக்குள்ளே கோளாறு என்னவென்றும் எனக்குத் தெரியாது. நீண்ட காலம் நான் ஜிம்மைப் (Jim) பார்க்கவில்லை . ஆனால் நான் ........ நான் சிறு பையனாயிருந்த போது அவர் என்னை அறிந்திருந்தார். ஆனால் ஜிம், நீர் இங்கே எதற்காக இருக்கிறீர் என்பதை கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தக் கூடுமானால், நீர் அதை ஏற்றுக் கொள்வீரா? நீங்கள் அதை விசுவாசிக்கையில் நீங்கள் கேட்டுக் கொள்வதை அப்பொழுது பெற்றுக் கொள்வீர்களா? (அந்த சகோதரன், "ஆமென்'' என்கிறார் - ஆசி.) நீர் இங்கே ஒரு மகனுக்காக இருக்கிறீர் ["ஆமென்." அது ஒரு புத்தி சுயாதீனமற்றநிலை. ["ஆமென்."] அவன் சுகமடைவான் என்று நீர் விசுவாசிக்கிறீரா? ["ஆமென்." அப்படியானால் போய் அதை விசுவாசியுங்கள். (ஆமென்.") உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்க மாத்திரமே செய்யுங்கள். (சகோதான் ஜிம், நான் அருகில் வரவேண்டும் என்று நினைக்கிறீர்.)  260. நான் இந்த அம்மாளை அறிவேன். அவள் என்னுடைய மிக அருமையான ஒரு நண்பனின் மனைவி. அவளுடைய பெயர் ஹிம்மிலிபர். (Himmelheber) நான் உம்மை ஒரு கடையிலே இங்கே சமீபத்தில் கண்டேன். உங்களுக்கு என்ன கோளாறு என்பதைப் பற்றி என்னிடத்தில் எந்தக் கருத்தும் இல்லை. நான் உம்மை அறிவேன். நான் உம்முடைய புருஷனை அறிவேன். சிறுபையன்களாய், உங்களுடைய புருஷனும் நானும் ஒன்று சேர்ந்து வளர்ந்தோம். ஒரு வர்மமுறை மருத்துவராக இருப்பதற்கு அவர் ஒரு வர்மமுறை மருத்துவராக படித்தார் என்று நான் நினைக்கிறேன். அது உண்மை நான் ....... உம்முடைய கோளாறு என்ன என்பதை அறிய வேண்டும். ஆனால் கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினால் ,..... 261. இப்பொழுது திருமதி. ஹிம்மிலிபர் (Himmelheber) கில்பர்ட் (Gilbert) நிமித்தமாகவும், நான் வழக்கமாக போகும் அவருடைய சகோதரி நிமித்தமாகவும், அவர்கள் நிமித்தமாக என்னால் சுகமாக்க முடிந்தால், நான் அதைச் செய்வேன். ஆனால் என்னால் முடியாது. ஆனால் நீங்கள் இப்பொழுது விசுவாசித்தால் அவர் செய்வார். அவர் உமக்கு அதை - அதை தெரியப்படுத்துவாரானால் ........ நிச்சயமாகவே உம்முடைய பெயரை எனக்குத் தெரியும். நான் உங்களை நீண்ட காலமாக அறிவேன். ஆனால் உமக்கு என்ன கோளாறு என்பதை தேவன் எனக்கு கூறுவாரானால் உங்களுடைய சுகத்திற்காக அவரை நீங்கள் விசுவாசிப்பீர்களா? (அந்த சகோதரி, "நான் விசுவாசிப்பேன்" என்கிறார். - ஆசி.) உங்களுடைய கோளாறு என்னவென்றால் மூட்டு வியாதியாய் இருக்கிறது ("ஆம்.”] விரைத்துப் போய் காலையிலே படுக்கையிலிருந்து எழுப்ப முயற்சிக்கிறதை நான் காண்கிறேன். அது முற்றிலும் உண்மை . சரி. திருமதி. ஹிம்மிலிபர் வீட்டிற்கு திரும்பிப்போய் உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். தேவனாகிய கர்த்தர் உங்களை சுகமாக்குகிறார். உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 262. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய முழு இருதயத் தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், ''ஆமென்'' என்கிறார்கள். - ஆசி.] தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். சரி. 263. இங்கே ஒரு அம்மாள் இருக்கிறாள். சகோதரியே இங்கே பாருங்கள். இல்லை, எனக்கு அந்த ஸ்திரீயைத் தெரியாது. ஒருவரை ஒருவர் நாங்கள் அறியாதவர்களென்று நான் நினைக்கிறேன். ஆனால் தேவன் நம்மை அறிந்திருக்கிறார், அது சரிதானே? நாம் அநேக வருடங்கள் இடைவெளியில் பிறந்திருக்கிறோம். ஆனால் எனக்கு தெரிந்தமட்டில் அல்லது உங்களுக்கு தெரிந்தமட்டில் இதுதான் நம்முடைய முதல் சந்திப்பு. இதுதான் நம்முடைய முதல் சந்திப்பு. அவளுடைய தலையை அவள் அசைத்துக் கொண்டிருக்கிறதை நீங்கள் காணமுடியும். அது உண்மை. என்னுடைய ஜீவியத்தில் அந்த ஸ்திரீயை காண்பது இதுதான் முதல் முறை. ஆனால் - ஆனால் தேவன் எங்கள் இருவரையும் அறிந்திருக்கிறார். நாங்கள் சிறுபிள்ளைகளாய் இருந்தது முதற்கொண்டே அவர் எங்களை அறிந்துள்ளார். அவர் எங்களை அறிந்துள்ளார். அவர் உலகம் உருவாவதற்கு முன்பிருந்தே எங்களை அறிந்துள்ளார். இன்றிரவு சரியாக நாங்கள் இங்கே நின்று கொண்டிருப்போம் என்பதை அவர் அறிந்துள்ளார். 264. ஒரு அணுவோ அல்லது ஒரு மூலக்கூறோ உண்டாவதற்கு முன்பே இந்த சம்பவம் நடைபெறும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருந்தார். அவர், ஏனென்றால் அவர் இருந்தார். அவர் எல்லையற்றவராயிருக்கிறார். அவர் உலகம் உண்டாவதற்கு முன்பிருந்தே எல்லாக் காரியத்தையும் அறிந்திருந்தார். சம்பவித்த ஒவ்வொரு காரியத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஒவ்வொரு ஈயையும், அது ஒவ்வொரு முறை அதன் இமையை அசைப்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருக்கிறார். ஏனென்றால் அவர் எல்லையற்றவராக இருக்கிறார். புரிகிறதா? உங்களால் எந்த காரியத்திற்குள்ளும் எல்லையற்றதை அடக்கி வைக்க முடியாது. அவர் வெறுமனே ........ இது அப்படியே பரிபூரணத்தில் பரிபூரணமாய் அவருக்குள் வாசமாயிருந்தது. அவர் சரியாய் வந்துவிட்டார், அவ்வளவுதான் புரிகிறதா? 265. இப்பொழுது உனக்குள்ள கோளாறு என்னவென்று அவர் எனக்கு கூறினால், அப்பொழுது நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? [அந்த சகோதரி, "கர்த்தாவே!" என்கிறாள்.- ஆசி.) உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? ["ஆம்." சரி. 266. நீங்கள் இருதயக் கோளாறினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் ஜெபிக்க விரும்புகிறீர்கள். இருதயம். அது உண்மை .  267. இப்பொழுது இருப்பினும் வேறு ஏதோ காரியம் உங்கள் இருதயத்தின் மேல் இருக்கிறது. பாருங்கள். நான் அதைப் பிடித்து விட்டேன். புரிகிறதா? நீர்,"இந்தக் காரியத்தை அவர் சொல்வதற்கு முன்பாகவே அவர் என்னைத் திருப்பி அனுப்பிவிடப் போகிறாரா?” என்று நினைத்தீர். இல்லை. நான் உனக்குச் சொல்லப் போகிறேன். நீ இங்கே ஒரு பையனுக்காக, உன்னுடைய மகனுக்காக இருக்கிறாய். அது உண்மை. அந்தப் பிள்ளை இங்கேயில்லை. அந்த சகோதரி, "இல்லை" என்கிறாள். - ஆசி.) அந்த மகன் ஒஹையோ (Ohio) வில் இருக்கிறான். ["ஆம்.” அவன் ஒரு ஷயரோக மருத்துவமனையில் இருக்கிறான் ("ஆம்.") ஷயரோக வியாதியோடு இருக்கிறான் "ஆம்." அவன் இரட்சிக்கப்பட வில்லை . நீர் அவனுடைய ஆத்துமாவிற்காகவும், அவன் சுகமடைவதற் காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர். கர்த்தர் உரைக்கிறதாவது.  268. அது சரியா. அல்லது இல்லையா என்று நீ பரிசோதித்துப் பார் என்று நான் உனக்கு சவாலிடுகிறேன். அது உண்மை . இல்லையா அம்மாளே? (அந்த சகோதரி, “ஆம் ஐயா” என்கிறாள். - ஆசி.] அது உண்மையாய் இருக்கிறது ("ஆம்.” சரி. என்னால் சுகப்படுத்த முடியாது. நீங்கள் விசுவாசிப்பீர்களா? ["ஆம் ஐயா.” அப்படியானால் போய் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அதை அப்படியே விசுவாசிக்கும் போது, அதை சரியாக நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். கர்த்தருடைய நாமத்தினாலே போங்கள். ஆமென்.. 269. உங்களுடைய முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார், "ஆமென்" என்கின்றனர். - ஆசி.) அவர் .......... நல்லது, ஒளியானது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்று நாம் அறிவோம். நாம் கர்த்தராகிய இயேசுவின் சமூகத்திற்குள் இருக்கிறோம். நீங்கள், "அவர் உங்களுடைய சிந்தைகளை பகுத்தறிந்து கொண்டிருக்கிறார்” என்று கூறுகிறீர்கள். 270. சரி. நான் இந்த அம்மாளை பார்க்கக்கூட மாட்டேன். அம்மாளே உங்களுடைய கரத்தை என் கரத்தின் மேல் வையுங்கள். கர்த்தர் என்னிடத்தில் இந்த வழியாய், இந்த வழியாய் பார்த்து உங்களுக்கு உள்ள கோளாறு என்ன என்று கூறினால் நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? [அந்த சகோதரி, "ஆம்" என்கிறாள். - ஆசி.) நீங்கள் சுகமாக்கப்படுவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? ["ஆம்." அது உங்களுடைய முதுகில் இருக்கிறது. அது உண்மை . அது சரியென்றால் என்னிடத்திலிருந்து மேலாக உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். "ஆமென்." போய் சுகமடையுங்கள். இயேசுகிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். புரிகின்றதா? சரி. 271. அவர் - அவர் அப்படியே நேற்றும் இன்றும் என்றும் மாறாத கர்த்தராகிய இயேசுவாய் இருக்கிறார். சரி.  272. வந்து கொண்டிருக்கிற இந்த மனிதன், மூட்டு வியாதியிலிருந்து நீங்கள் சுகமடைய வேண்டுமா? தேவன் உம்மை சுகப்படுத்துவார் என்று நீர் விசுவாசிக்கிறீரா? (அந்த சகோதரன், "ஆம்" என்கிறார். - ஆசி.) அப்படியே திரும்பிப்போய் சுகமடையுங்கள். அது எவ்வளவு சாதாரணமாய் இருக்கிறது. அதை அப்படியே விசுவாசியுங்கள். உம்முடைய இருக்கைக்குச் சென்று, "நான் என் முழு இருதயத்தோடும், என் முழு மனதோடும் விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். நீங்கள் சுகமாகி விடுவீர்கள். அப்படியே உங்களுடைய முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள். சந்தேகப்படாதீர்கள். சரி, ஐயா. 273. இங்கே உள்ள இந்த ஸ்திரீ, நிச்சயமாகவே, அவள் நடுங்கிக் கொண்டிருக்கிறதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவளுக்கு முடக்குவாதம் இருக்கிறது. ஒருவேளை, அங்கே வேறு ஏதோ காரியம் தவறாக இருக்கலாம். நாம் பார்ப்போம். ஆம், ஐயா, அவளுக்கு சர்க்கரை நீரழிவு வியாதி இருக்கிறது. அம்மா, அந்த சர்க்கரை நீரழிவு வியாதியிலிருந்து தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 274. தேவனாகிய கர்த்தாவே, இந்த பொல்லாத காரியத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நாங்கள் கடிந்து கொள்கிறோம். அவள் சுகமாக்கப்படுவாளாக. ஆமென். சகோதரியே, உங்கள் இருக்கைக்கு திரும்பிச் சென்று சுகமடையுங்கள். 275. உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? (சபையார், “ஆமென்” என்கின்றனர். - ஆசி.)  276. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார் சத்தமாய் களிகூர்ந்து, ''ஆமென்'' என்கின்றனர். - ஆசி.) உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால் . 277. ஜெப அட்டையில்லாத உங்களைத்தான், சுகவீனமாயிருந்து, தேவையுள்ள உங்களைத்தான். தேவனில் விசுவாசமாய் இருங்கள். உங்களால் அதை விசுவாசிக்க முடியும். சரி. 278. அந்தப் பையனை சுகத்திற்காக நீர் கொண்டு வந்தீர். அது அவனுடைய முதுகிலிருக்கிறது. அது உண்மை . அவள் முடமாக இருக்கிறாள். அவன் சுகமடைந்து, அவனுக்கு எல்லாம் சரியாகி திரும்ப அர்கென்சாஸ்க்கு (Arkansas) அவனை நீங்கள் கொண்டு போக முடியு மென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீர் சிகரெட்டுகளை விட்டு விட விரும்புகிறீரா? "நான் விட்டு விடுவேன் " எனக்கூறி, கர்த்தரை சேவித்து, சரியானதைச் செய்வீர்களா? நீங்கள் அதைச் செய்வீர்களா? சரி, சரி அப்படியானால் போய், நீங்கள் அங்கே நிற்கையில் அந்த பிள்ளையின் மேல் உம்முடைய கரத்தை இப்பொழுதே வையுங்கள். பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் அந்தப் பிள்ளையை சுகப்படுத்துவாராக. அதை சுகப்படுத்த ...... நீர் விசுவாசிக்கும்படி நான் சவாலிடுகிறேன்.  279. இங்கே ஒரு அம்மாள் உட்கார்ந்து கொண்டு, அவளுடைய கண்களால் பார்த்துக் கொண்டே, என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். உங்களுடைய காலில் தொல்லை இருக்கிறது. அது உண்மை . நீர் யாரென்று தேவனால் என்னிடத்தில் கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? திருமதி ஓர்லி (Worley) சரி, ஐயா, அது முற்றிலும் உண்மை. என்னுடைய ஜீவியத்தில் உங்களைக் கண்டதேயில்லை. அங்கே உங்களுக்குப் பின்னாக உட்கார்ந்திருப்பது உங்களுடைய கணவன். அவர் ஒரு பிரசங்கியார். என்னுடைய ஜீவியத்தில் அவரைக் கண்டதேயில்லை. ஆனால் அது உண்மையாய் இருக்கிறது. 280. ஐயா, உம்மோடிருக்கிற காரியம் என்னவென்பதை தேவன் எனக்கு கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உம்முடைய முகத்தில் உமக்கு ஒரு இடத்தில் ஒன்று உள்ளது. அது என்னை புற்றுநோயா அல்லது அது என்ன என்று உமக்குத் தெரியாது. கடுமையான வேதனையும் இருக்கிறது. அது உண்மை . நீங்கள் சுகமடைய விரும்புகிறீர்கள். அது உண்மைதான். திரு. ஒர்லி. சரி. உங்களுடைய முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன் "ஆம்" என்கிறார்.) அப்படியானால் போய் உங்களுடைய சுகத்தை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் பெற்றுக் கொள்ளுங்கள். அதுதான் அது. அது உண்மை . 281. உங்களுடைய கண்களைக் குறித்து என்ன? பின்னாலே அங்கே, அங்கே உட்கார்ந்து கொண்டு என்னையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்ற உங்களை தேவன் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கின்றீர்களா? சரி. உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்தால் நல்லது. தேவனில் விசுவாசம் உள்ளவராய் இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான்.  282. ஓ, என்னே! அது எங்கு பார்த்தாலும் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நீங்கள் வெறுமனே அதை விசுவாசிக்கக் கூடுமானால், அது அதிகமாக இப்பொழுது இங்கே உள்ளே வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் விசுவாசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அவர் தேவனுடைய குமாரனென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறராறென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 283. இப்பொழுது, அவரை உங்கள் இரட்சகராக அறிந்திராத ஒரு நபர் இங்கே இருக்கிறாரா? நீங்கள் இரட்சிக்கப்படும்படி விரும்புகிறீர்களா? நீங்கள் அதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியை ஒருபோதும் பெற்றுக் கொள்ள வேயில்லை. நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கும்படியாய், கிறிஸ்துவுக்குள் இருக்கும்படியாய் வர விரும்புவீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்தி, "நான் விரும்புகிறேன்" என்று உங்களால் கூற முடிந்தால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே மேலே பீடம் மட்டாய் இப்பொழுதே வாருங்கள். 284. ஒரு நிமிடம் அந்த இசைப்பேழையில் அங்கே எங்களுக்கு ஒரு சிறிய சுருதியை நாங்கள் முடிப்பதற்கு முன்னர் கொடுங்கள். 285. இங்கே பீடத்தண்டைக்கு, இங்கே வரும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன். நேராக இங்கே வந்து முழங்காற்படியிடுங்கள். அது தான், வாலிப மனிதனே, நேராக எழும்பு, சிறு பெண்ணே இங்கே வா. நீர் அந்த ......... இந்த சிறு பையனைப் பாருங்கள். அது யாருக்காவது ஒரு அவமானமாய் இருக்க வேண்டும். நீங்கள் முன்னுக்குப் போக வேண்டுமா? நீங்கள் அவரிடத்தில் நெருங்கி வர விரும்புகிறீர்களா? இப்பொழுதே நேராக வாருங்கள். நேராக வாருங்கள். ஆமென். இப்பொழுதே நேராக பரிசுத்த ஆவியின் பிரசன்னத்திற்குள் மேலே வாருங்கள். அது சரி. சகோதரனே, இப்பொழுது வாருங்கள். சுகமளிக்கும் ஆராதனையை துவங்குவதற்கு முன்னதாக நீங்கள் இங்கே மேலே வந்து முழங்காற்படியிடமாட்டீர்களா? இங்கே நேராக இப்பொழுது வந்து உங்கள் ஆத்துமாவிலே சுகமடையுங்கள். அதற்குப் பின்னர் என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். கிறிஸ்துவுக்குள்ளாக வாருங்கள்.  286. அவரே வழியும், சத்தியமும், ஒளியுமாய் இருக்கிறார். அவருக்குப் புறம்பாக ஒரு மனிதனும் வருகிறதில்லை. மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், லுத்தரன் என்று கூறுகிற நீங்கள் யாராய் இருந்தாலும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவில்லையென்றால், இப்பொழுதே அதைச் செய்வதற்கான நேரமாக உள்ளது. இப்பொழுதே எழும்பி வாருங்கள். கிறிஸ்துவுக்குள்ளாக வாருங்கள். நீங்கள் இதிலே ஆச்சரியப் படுவீர்கள். அதை எப்படி பற்றிக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் அறியமாட்டீர்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாலொழிய நீங்கள் அதைப் புரிந்துகொள்ள மாட்டீர்கள். இப்பொழுதே வாருங்கள்.  287. நான் சத்தியத்தை கூறியிருந்தால், தேவன் என்னிடத்தில் பேசினதாகும். தேவன் என் மூலமாகப் பேசினார். நான் சத்தியத்தை கூறியிருக்கிறேன். அவர் ஒருவரே வழியாய் இருக்கிறார். அவர் ஒருவரே அஸ்திபாரமாய் இருக்கிறார். அவர் ஒருவரே இரட்சிப்பாய் இருக்கிறார். "இயேசுகிறிஸ்துவின் நாமமேயல்லாமல் வானத்தின் கீழ் இரட்சிக்கப் படுவதற்கு வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை”. இப்பொழுது அவரை ஏற்றுக்கொள்ள நீங்கள் வரமாட்டீர்களா? 288. அங்கே பின்னாக பின்வாங்கிப் போனவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? நீங்கள் இங்கே வந்து, இப்பொழுது முழங்காற்படியிட உங்களுக்கு விருப்பமில்லையா? பின்வாங்கிப் போய் தேவனிடத்தி லிருந்து விலகிச் சென்ற உங்களைத்தான், இப்பொழுது நீங்கள் வருவீர்களா? மேலே வாருங்கள். இதுதான் வேளை. 289. இப்பொழுது பாருங்கள். நீங்கள் இதைத் தள்ளிவிட்டால் அங்கே உங்களில் யாருக்காவது, வேறே ஏதாவது நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. இப்பொழுது நான் இங்கே நின்று கொண்டிருக்கின்ற காரணத்தினால் நான் இதைக் கூறவில்லை. ஆனால், நண்பர்களே நான் உங்களிடத்தில் கூறிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அதிகமாக தேவன் என்ன செய்ய முடியும்? இதுதான் நேரமாய் இருக்கிறது. இதுவே தேவன் ஜனங்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கின்ற வேளையாய் இருக்கிறது. 290. சகோதரியே, அது உண்மை . சகோதரிகளே, அது உண்மை . எழும்பி வாருங்கள். இதுதான் வேளையாய் இருக்கிறது. இது உங்களுடைய நேரமாய் இருக்கிறது. நீங்கள் மரித்து அவருடைய சமூகத்திற்குள் போகும் வரைக்கும் நீங்கள் அவருக்கு நெருக்கமாய் எப்போதும் இருக்கமாட்டீர்கள். அவர் இப்பொழுது சரியாக இங்கே தம்மைத்தாமே ஜீவிக்கிறவராக நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் வரமாட்டீர்களா? ஓ தேவாட்டுக் குட்டியே, நான் வந்தேன், நான் வந்தேனே! பரிந்துரை ஏதுமின்றி வெறுமனே நான் இருக்கையில், எனக்காகவே உம்முடைய இரத்தம் சிந்தப்பட்டது, எனவே நான் வந்தேன், நான் விசுவாசிப்பேன், ஓ தேவாட்டுக் குட்டியே, நான் வந்தேன், நான் வந்தேனே! வெறுமனே நான் இருந்துகொண்டு, காத்திராமல், என் ஆத்துமாவின் ஒரு ........ போக்குவதற்கு, 291. அவர்களிடத்தில் இருக்கிற ஒரு இருளான இடம் அவிசுவாசமாயிருக்கிறது. வாருங்கள் இதுதான் அது. [சபையார் சத்தமாய் ஜெபிக்கின்றனர். - ஆசி.] உம்முடைய இரத்தமே ஒவ்வொரு கறையையும் போக்க முடியும், ஒ தேவாட்டுக் குட்டியே, நான் வந்தேன், நான் ..... 292. அவர் வார்த்தைகள் மூலமாய் வந்து, ஒரு நபருக்குள்ளாக வந்து, உங்களிடத்தில் பேசிக்கொண்டு, அவர் இங்கிருக்கிறார் என்று நீங்கள் அறியும்படி செய்த பிறகு, இப்பொழுது உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற அவரை எப்படி உங்களால் தள்ளிவிடக் கூடும்? அந்த சிறிய சத்தம் உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறது. அது தேவனாய் இருக்கிறது. நீங்கள் வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். நண்பர்களே நாம் இங்கே நீண்ட நேரம் இருப்பதில்லை. நாம் இங்கிருந்து செல்லவிருக்கிறோம். நீங்கள் வந்து இந்த கூட்ட ஜனங்களோடு முழங்காற்படியிட மாட்டீர்களா? "தேவனே என்னிடத்தில் இரக்கமாயிரும். இப்பொழுதே நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். நான் மறுபடியும் பிறக்க விரும்புகிறேன். நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட விரும்புகிறேன். நான் உண்மையாயுள்ள எதோ ஒன்றையே விரும்புகிறேன். நான் உண்மையாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று கூறுங்கள். 293. நாங்கள் இந்த அடுத்த அடியை பாடுகையில், பீடத்தைச் சுற்றிலுமாய் சரியாக இப்பொழுதே வாருங்கள். இப்பொழுது நாங்கள் வருகையில் நீங்களும் வருவீர்களா? [சபையார் தொடர்ந்து சத்தமாய் ஜெபிக்கின்றனர். - ஆசி.)  294. இப்பொழுது உங்களோடு சுற்றிலுமாய் இருக்கிற நல்ல கிறிஸ்தவ ஜனங்களாகிய உங்களில் சிலர் இங்கே மேலே வருகிறார்கள். உங்களில் சில சுகவீனமான ஜனங்கள் கூடவே வந்து முழங்காற்படியிடுங்கள். நாங்கள் ஜெபிக்கையிலே கிறிஸ்தவ ஜனங்களாகிய உங்களில் சிலர் இவர்களோடே எழும்பி வந்து முழங்காற்படியிடுங்கள். ...... ஏற்றுக்கொள்ளும், வரவேற்று, பாவங்களை மன்னித்து, விடுவியும், ஏனென்றால் ....... பாவியே நீ அவர்களோடு வா. நீ அவர்களோடு வா. ........ உம்மண்டை வந்தேன், ஓ தேவாட்டுக் குட்டியே, நான் வந்தேன் இங்கே வருவாயா ........ ? வெறுமையாய் நான் இருந்து, காத்திராமல், என் ஆத்துமாவின் ஒரு கறுத்த கறையைப் போக்க, உம்மண்டைக்கே வருகிறேன், உம்முடைய இரத்தமே ஒவ்வொரு கறையையும் போக்கமுடியும் ஓ தேவாட்டுக் குட்டியே ...... 295. நீங்கள் வரவில்லையென்றால், நீங்கள் ஒரு ஆசீர்வாதத்தை தவறினவர்களாய் இருப்பீர்கள். [சபையார் தொடர்ந்து சத்தமாய் ஜெபிக்கின்றனர். - ஆசி.] நீரே என்னை ஏற்றுக்கொள்ளும், வரவேற்று, மன்னித்து, தூய்மையாக்கி, விடுவியும்; உம்முடைய இரத்தமே ஒவ்வொரு கறையையும் போக்க முடியும், எனவே ஓ தேவாட்டுக் குட்டியே, நான் வந்தேன், நான் வந்தேனே! 296. சரி. சபை முழுவதுமே, உங்களுடைய தலைகள் இப்பொழுது வணங்கியிருக்கட்டும். ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். பீடத்தைச் சுற்றியுள்ள இந்த ஜனங்களுக்காகவும், ஒவ்வொருவருக்காகவும் ஜெபியுங்கள்.  297. இப்பொழுது இங்கே பீடத்தண்டையிலே இருக்கின்ற ஒவ்வொருவரும் நீங்கள் சிந்தப்பட்டதான இரத்தத்தின் அடிப்படையின் பேரில் வந்திருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படியாக, இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக வந்திருக்கிறீர்கள். நீதியுள்ள தேவன் சித்தமுள்ளவராய் இருக்கிறார்.  298. அங்கே தண்ணீர் ஆயத்தமாய் இருக்கும். போதகர் உங்களை அங்கே கொண்டு வருவதற்கு விரும்பினால், அங்கே சபையில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதற்கு நாளை நீங்கள் அந்த குளத்திற்கு வரலாம். 299. "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்."  300. “இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதை அவர்கள் கேட்டார்கள்.'' 301. அப்போஸ்தலர்களோடு இருந்த பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் தேவனாய் இருக்கிறார், அவர் இன்றிரவு இங்கேயிருக்கிறார். [சபையார் தொடர்ந்து சத்தமாய் ஜெபிக்கின்றனர். - ஆசி.)  302. இப்பொழுது ஒவ்வொருவரும் ஜெபத்தில் தலை வணங்கி இருப்போமாக. போதகர் நம்மை நடத்தும்பொழுது ஒவ்வொருவரும் உங்களுடைய சத்தத்தை அப்படியே உயர்த்தி ஜெபியுங்கள். சகோதரன் ரடல். சரி... 51